பெண்களின் மன உளைச்சலும் காரணங்களும்

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாயைப் பொறுத்தவரைக்கும் அதில் ஓர் ஒழுங்குமுறை இருக்க வேண்டும். ஆனால், சிலருக்கு அதில் ஒழுங்கற்றதொரு தன்மை காணப்படும். பெரும்பாலும் வேலைக்குச் செல்லும் இளம் பெண்களுக்கு இப்பிரச்சினைக்கு அதிகமாக காணப்படுகிறது. 

இதற்கு பெண்களின் மன அழுத்தமே பிரதான காரணமாக அமைகின்றது.
வேலைக்குச் செல்லும் பெண்கள் அதிக அளவில் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். வீட்டில் இருக்கும் பெண்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகுவது மிகவும் குறைவு எனலாம். 

வேலைக்குச் செல்கின்ற இளம் பெண்கள், வேலைத்தளங்களில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் போன்ற பல்வேறு வழிகளில் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். பருவமடைந்த பெண்கள் இவ்வாறு அதிகமான மன அழுத்தத்திற்கு ஆளாகும் போது, அவர்களின் மூளையில் அது ஒரு சுமையாகவே பதியப்படுகிறது. 

இந்தச் சுமையானது மூளையிலிருந்து வருகின்ற மாதவிடாய்கான தூண்டுதல்களில் தாமதங்களை ஏற்படுத்துகின்றது. இத்தூண்டுதல்கள் ஹார்மோன்கள் சுரப்பதை தாமதப்படுத்தி அவர்களின் மாதவிடாயிலும் தாமதத்தை ஏற்படுத்துகிறது. இதுவே பெண்களின் மாதவிடாய் ஒழுங்கற்று ஏற்படுவதற்கான பிரதான காரணியாக அமைகின்றது. 

ஊட்டச் சத்துள்ள உணவுகளை உட்கொள்ளாமை, சரியான உடற்பயிற்சியின்மை போன்ற பிற காரணிகளும் பெண்களின் மாதவிடாய் ஒழுங்கு முறையில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. சாதாரணமாக முதல் மாதவிடாய் ஏற்பட்டு அடுத்த மாதவிடாயானது சற்று பிந்தி ஏற்படலாம். அதற்காக பயப்பட தேவையில்லை. 

அதேவேளை மாதவிடாய் முறையற்ற விதத்தில் ஏற்படுவது ஒரு நோயின் அறிகுறியல்ல என்பதையும் நன்றாக விளங்கிக்கொள்ள வேண்டும். எனவே, தேவையற்ற மனக்குழப்பங்களுக்கு ஆளாகுவதை இளம் பெண்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும். 

அத்துடன் தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டிருக்காமல் முடிந்தளவு ஓய்வாக உடம்பை வைத்துக்கொள்ளவும் வேண்டும். ஆகவே, சத்துள்ள உணவுகளை உட்கொள்வதுடன், முறையான உடற்பயிற்சி என்பனவற்றின் மூலம் ஒழுங்கானவிதத்தில் மாதவிடாயை பேணிக் கொள்வதுடன் உங்கள் உடலையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget