ஒய்ட் ராஜாவை காதலிக்கும் பிளாக் ரோஜா

களத்தி்ல் புரட்சிப் புயலாக மாறி எதிராளிகளை விரட்டியடிக்கும் செரீனா வில்லியம்ஸ் காதலிக்க ஆரம்பித்துள்ளார். காதலர் அவரது பயிற்சியாளர் பாட்ரிக் மோர்டோக்ளுதான். ஆனால் இந்தக் காதல் பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது. காரணம், செரீனா தான் சொன்ன வார்த்தையை தானே மீறியதால். அப்படி என்ன சொன்னார் செரீனா. எதை மீறினார். தொடர்ந்து படித்தால் தெரிந்து விட்டுப் போகிறது. வாங்க படிக்கலாம், செரீனாவும், பாட்ரிக்கும் பழகும் கதையை.

எல்லோரிடமும் பாட்ரிக் குறித்துப் பெருமையாக பேசுகிறார் செரீனா. தான் சமீப காலமாக தொடர்ந்து வெற்றிகளைக் குவிக்க பாட்ரிக்தான் காரணம் என்று பெருமை பொங்கப் பேசுகிறார் செரீனா. கடந்த ஆண்டு முதலே பாட்ரிக்குடன் நெருக்கமாக பழக ஆரம்பித்தார் செரீனா. பயிற்சியாளர்- வீராங்கனை என்ற அளவில் இருந்த இந்தப் பழக்கம் பின்னர் நட்பாகி, காதலாகிப் போனது. ஆனால் முன்பு ஒருமுறை டிவி ஒன்றுக்கு செரீனா அளித்த பேட்டியின்போது கருப்பர் இனத்தைச் சேர்ந்த ஆணைத்தான் டேட்டிங் செய்வேன் என்று கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம். ஆனால் தான் சொன்னதை தானே முறியடித்து விட்டார் செரீனா.

சரி இந்தக் காதல் திருமணத்தில் முடியுமா என்ற கேள்விக்கு ரொம்ப வினோதமான பதிலைக் கூறினார் செரீனா... நான் என்னையே மணந்துள்ளேன். நான் ரொம்ப சுயநலவாதி. எனக்கென்று ஒரு பாதை.. அதில்தான் போவேன் என்கிறார். இப்போதுதான் முதல் முறையாக ஒரு வெள்ளையரை காதலித்து வருகிறார் செரீனா. செரீனா காதலித்து வரும் பாட்ரிக்கின் வயது 42 ஆகும். பிரெஞ்சுக்காரர் ஆவார். கடந்த ஆண்டு நடந்த பிரெஞ்சு ஓபன் போட்டியின்போதுதான் பாட்ரிக் அவருக்கு அறிமுகமானார்.

பாட்ரிக்குடன் சேர்ந்த பின்னர் செரீனாவுக்கு ஏறுமுகம்தான்... 5வது விம்பிள்டன் பட்டம், ஒலிம்பிக் தங்கம், 4வது அமெரிக்க ஓபன், 2வது பிரெஞ்சு ஓபன் ஆகிய பட்டங்களை வென்றுள்ளார். அதை விட முக்கியமாக நம்பர் ஒன் வீராங்கனையாகவும் உயர்ந்துள்ளார்.

செரீனா வில்லியம்ஸ் இப்படி பாட்ரிக்குடன் பட்டையைக் கிளப்பி வரும் நிலையில் அவரது அக்காவானா வீனஸ் வில்லியம்ஸ், கியூபா நாட்டைச் சேர்ந்த மாடல் எலியோ பிஸ் என்பவருடன் டார்லிங் போய்க் கொண்டிருக்கிறாராம்.

நல்லாதானே போய்ட்டிருக்கு ...!

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget