ராதா மகள் கார்த்திக நாயர் தற்போது கன்னடத்துக்குள்ளும் தனது அழகிய கால்களை எடுத்து வைத்துள்ளார். தமிழில் தொடங்கி, தெலுங்கில் தொடர்ந்து, மலையாளம் பறஞ்சு இப்போது கன்னடத்துக்குள்ளும் அவர் புகுந்துள்ளார். வழக்கமாக கன்னடப் படங்களில் ஒரு முன்னணி நடிகை நடிக்க ஆரம்பித்தால் பிற மொழிகளில் அவருக்கு வாய்ப்பு வாயைப் பிளந்து விட்டதாக கூறுவார்கள். எனவே கார்த்திகாவும் அந்த லிஸ்ட்டில் சேர்ந்து விட்டாரோ
என்ற சந்தேகம் கிளம்பியுள்ளதாம் கோலிவுட்டில்.
அந்தக்காலத்து ஹீரோயின் ராதாவின் மூத்த மகள்தான் கார்த்திகா. கோ படம் மூலம் தமிழுக்கு வந்தார். இருப்பினும் முதலில் தெலுங்கில்தான் அறிமுகமானார் கார்த்திகா. 2009ம் ஆண்டு வெளியான ஜோஷ்தான் அவரது முதல் படம். அதில் நாயகனாக நடித்தவர் நாக சைதன்யா. அதன் பிறகு அப்படியே தமிழுக்கு வந்தார். பிறகு தாய்மொழியான மலையாளத்திலும் திறமையைக் காட்டினார்.
அம்மா ராதாவுக்கு ஏற்றம் தந்த பாரதிராஜாவின் கையால் தற்போது குட்டுப்பட்டுள்ளார் கார்த்திகா. அவரது இயக்கத்தில் அன்னக்கொடியில் நடித்துள்ளார். இந்த நிலையில் திடீரென கன்னடத்திற்குத் தாவியுள்ளார் கார்த்திகா. ஏன் இந்த திடீர் தாவல் என்று தெரியவில்லை. கன்னடத்தில் பிருந்தாவனா என்ற படத்தில் நடித்து அறிமுகமாகிறார் கார்த்திகா.