கவர்ச்சியில் கலக்க வரும் சஞ்சனா சிங்

ரேணிகுண்டா படத்தில் கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக அறிமுகமானவர்  சஞ்சனாசிங். கவர்ச்சி வேடங்களிலும், கவர்ச்சி ஆட்டத்திலும் கலக்கிக் கொண்டிருந்தவர் ரகளபுரம் படத்தில் கவர்ச்சி போலீசாக நடிக்கிறார். கருணாசை ஒன் சைடாக லவ் பண்ணும் கேரக்டர். அவர் மீது கமிஷனர் முதல் கான்ஸ்டபிள் வரை ஒரு கண் இருக்குமாம். தன் அழகாலேயே திருடர்களையும், ரவுடிகளையும் பிடிப்பாராம்.

"என்னை எல்லோரும் அயிட்டம் சாங்கில் ஆடத்தான் கூப்பிடுறாங்க. நடிக்கிறதுக்கு கூப்பிடவே மாட்டேகுறாங்க ரேணிகுண்டா படத்துல பாலியல் தொழில் செஞ்சு தங்கச்சிய காப்பாத்துற கேரக்டர்ல நடிச்சேன். அதுக்கு பிறகு எனக்கு நடிச்ச யாருமே சான்ஸ் தரலை. கருணாஸ் சார்தான் சான்ஸ் கொடுத்தாரு. இதுல போலீசா நடிச்சாலும் என்னோட பிராண்ட் கவர்ச்சி இருக்கும்" என்கிறார் சஞ்சனா.

பழைய பதிவுகளை தேட