ஸ்வேதா மேனனின் பிரசவ காட்சி - படங்களுடன்

ப்ளெஸ்ஸி இயக்கத்தில் ஸ்வேதா மேனன் நடித்திருக்கும் களிமண்ணு படத்துக்கு சென்சார் யு/ஏ சான்றிதழ் தந்துள்ளது. 

காழ்ச்சாவில் தொடங்கியது ப்ளெஸ்ஸியின் திரைப்பயணம். தன்மாத்ரா, பளிங்கு என நல்ல படங்களை தந்தவர் களிமண்ணு படத்தை ஆரம்பித்த போது பிரச்சனை தொடங்கியது. முக்கியமாக, ஸ்வேதா மேனனின் நிஜ பிரசவக் காட்சியை களிமண்ணு
படத்துக்காக ஷூட் செய்தார். ஸ்வேதா மேனன், அவரது கணவர் இருவ‌ரின் சம்மதத்துடன்தான் படமாக்கினார். இருந்தும் ஏகப்பட்ட எதிர்ப்புகள். வழக்கம் போல ஸ்வேதா மேனன் அதனை கண்டு கொள்ளவில்லை.


புராண அபிமன்யூவுக்கும் அவனது தாய் சுபத்ராவுக்கும் உள்ள உறவின் இன்ஸ்பிரேஷனில் ப்ளெஸ்ஸி எழுதிய கதைதான் களிமண்ணு. ஒரு தாய்க்கும் அவளது குழந்தைக்குமான - பிறப்பிற்கு முன்னும் பின்னும் - உறவை படம் சொல்கிறது. படத்தைப் பார்த்த சென்சார் ப்ளெஸ்ஸியை பாராட்டியதோடு யு/ஏ சான்றிதழ் தந்திருக்கிறது.

படம் ஆகஸ்ட் 23 வெளியாகும்போது அனைத்து சர்ச்சைகளும் ஓய்ந்துவிடும் என்றார் ப்ளெஸ்ஸி.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget