ஸ்வேதாவின் பிரசவ காட்சிக்கு சென்சார் அனுமதி

மலையாள நடிகை ஸ்வேதா மேனனின் நிஜ பிரசவ காட்சிக்கு சென்சார் போர்டு அனுமதி அளித்துள்ளது. தமிழில் அரவான், சிநேகிதியே உள்ளிட்ட படங்களில் நடித்த மலையாள நடிகை ஸ்வேதா மேனன் இந்தி படங்களிலும் நடித்துள்ளார். 

தற்போது, மலையாளத்தில் களிமண்ணு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பிளஸ்சி இயக்குகிறார். படத்தில் பிரசவ காட்சி ஒன்று உள்ளது.
படபிடிப்பின் போது சுவேதாவும் உண்மையாக கர்ப்பமாக இருந்தார். அதனால், சுவேதாவின் நிஜ பிரசவத்தை படமாக்க எண்ணினார் பிளஸ்சி. இதற்காக சுவேதாவிடம் சம்மதம் கேட்டார். இதற்கு சுவேதாவும் அவரது கணவரும் சம்மதம் தெரிவித்ததை தொடர்ந்து, அக்காட்சி தத்ரூபமாக படமாக்கப்பட்டது. 

இதற்கு பலர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்தனர். கேரளாவில் பெண்கள் அமைப்பு ஒன்று கடுமையான எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், படத்தில் இருந்து அக்காட்சியை எடுக்காவிட்டால் படம் வெளிவரும் போது போராட்டம் நடத்தப்போவதாக மிரட்டினர். இந்நிலையில், இப்படத்தை தணிக்கை குழுவிடம் திரையிட்டனர். படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர்.  இதுகுறித்து பிளஸ்சி கூறும்போது, பாடல் மற்றும் டிரைலர் பார்த்து சென்சார் அனுமதி அளித்துள்ளது. வரும் ஆகஸ்ட் 23ம் தேதி படத்தை வெளியிடவுள்ளோம் என்று கூறினார்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget