கணிப்பொறியின் முக்கிய நுட்பங்கள்

Driver:(டிரைவர்)விண்டோஸ் மற்றும் பிற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுடன் டிஜிட்டல் சாதனங்கள் (பிரிண்டர், மவுஸ், பிளாஷ் டிரைவ் போன்றவை) தொடர்பு கொள்ள தேவையான  சாப்ட்வேர் புரோகிராம். விண்டோஸ் போன்ற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் பலவகையான சாதனங்களுக்கான டிரைவர் பைல்கள் ஏற்கனவே பதியப்பட்டே கிடைக்கும். அப்படி இல்லாத நிலையில் இந்த
சாதனங்களுடன் சிடியில் அவற்றிற்கான டிரைவர்கள் தரப்படும். 

Virus:(வைரஸ்) கெடுதலை விளைவிக்கும் ஒரு கம்ப்யூட்டர் புரோகிராம். கம்ப்யூட்டர் இயக்கத்தில் குறுக்கீடு தந்து எரிச்சலைத்தரும் என்பது முதல் கம்ப்யூட்டர் இயக்கத்தினையே முடக்கி வைக்கும் வரை பலவகையான நாச வேலைகளில் ஈடுபடும். கம்ப்யூட்டர்களுக்கிடையே பைல்கள் பரிமாறப்படுகையில் 

(இமெயில், சிடி,பிளாப்பி மற்றும் பிளாஷ் டிரைவ்) இவை அவற்றுடன் இணைந்து சென்று நாசத்தை உண்டாக்கும். இமெயில் மூலம் சென்ற பின்னர் அந்த கம்ப்யூட்டரில் இருக்கும் இமெயில் முகவரிகளுக்கு மெயில் அனுப்புவது 

போலத் தானும் சென்று நாச வேலையில் ஈடுபடும். வைரஸ் புரோகிராம் கள் பொதுவாக எந்த அறிகுறியும் காட்டாது கம்ப்யூட்டருக்குள் இருக்கும். ஏதாவது நாள் அல்லது செயல்பாட்டினை மேற்கொள்கையில் தூண்டிவிடப்பட்டு நாச வேலையை மேற்கொள்ளும்

பழைய பதிவுகளை தேட