புதிய வசதிகளுடன் HTC T 329 W Desire XDS மொபைல் போன்

ஆட்டோ போகஸ், எல்.இ.டி. பிளாஷ் கொண்ட 5 எம்.பி. கேமரா, ஒரு கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டூயல் கோர் ப்ராசசர், ஆண்ட்ராய்ட் 4 ஐஸ்கிரீம் சாண்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம், ஏ - ஜி.பி.எஸ். வசதி எனப் பல சிறப்பம்சங்களுடன் அறிமுகமாகியுள்ளது HTC T 329 W Desire XDS மொபைல் போன். இதன் அதிக பட்ச விலை ரூ. 16,999.

இரண்டு பேண்ட் அலைவரிசைகளில், இரண்டு ஜி.எஸ்.எம். சிம்களை இயக்கக் கூடிய மொபைல் போனாக இது
வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் திரை எல்.சி.டி. டச் ஸ்கிரீனாகக் கிடைக்கிறது. மல்ட்டி டச் வசதி கொண்டுள்ளது. லவுட் ஸ்பீக்கர், 32 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்த மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட், 768 எம்.பி. ராம் மெமரி, 4 ஜிபி ஸ்டோரேஜ் மெமரி தரப்பட்டுள்ளது. நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, ஜி.பி.ஆர்.எஸ்., எட்ஜ், வை-பி, புளுடூத், யு.எஸ்.பி. ஆகியவை தரப்பட்டுள்ளன. ஆட்டோ போகஸ் மற்றும் எல்.இ.டி. பிளாஷ் கொண்ட 5 எம்பி திறன் கொண்ட கேமரா இயங்குகிறது. வீடியோ பதிவு செய்திடும் திறனுடன், ஜியோ டேக்கிங், இமேஜ் வியூவர் வசதியும் உள்ளது. 1 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டூயல் கோர் குவால் காம் ப்ராசசர் இயங்குகிறது. ஐஸ்கிரீம் சாண்ட்விச் ஆண்ட்ராய்ட் பதிப்பு 4 இயக்குகிறது. எம்பி3 மற்றும் எம்பி 4 பிளேயர் கள் கிடைக்கின்றன. 1,650 mAh திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி தரப்பட்டுள்ளது.