காலத்தால் மறக்கப்பட்ட தொழிற்நுட்ப பெயர்கள்

காலங்கள் செல்ல செல்ல பல விஷியங்கள் மறைந்து போகின்றன. மொழிகளும், வார்தைகளும், பேச்சுகளும் கூட உருமாறி வருகின்றன. டெக்னாலிஜிகளும் இதற்க்கு விதிவிளக்கல்ல. நேற்று பயன்படுத்தபட்ட டெக்னாலஜிகள் இன்று புதிய கண்டுபிடிப்புகளால் மறைக்கப்படுகின்றன. இன்றைய கண்டுபிடிப்புகள் நாளை மறைந்து போகலாம். ஒரு காலத்தில் பிரபலமாக பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் இன்று பெரும்பாலும் மக்களால் பயன்படுத்துவதில்லை.
அது போன்ற சில டெக்னாலஜி வார்த்தைகள் மற்றும் சில தகவல்களை கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.

மெயிலர் டேமோன் : சில வருடங்களுக்கு முன் இமெயில் சேவை அளிப்பவர்கள் மெயிலர் டேமோன்(Mailer Daemon) என்ற வார்த்தையை மெயிலுக்கு அட்ரஸாக பயன்படுத்துவார்கள் இப்பொழுது அதை யாரும் பயன்படுத்துவதில்லை.

டாட் காம் : டாட் காம்(dot com) வெப்சைட் அட்ரஸின் டொமைன் பெயருக்கு பின்னால் .com என்ற வார்தை மட்டும்தான் முதலில் பயன்படுத்த பட்டு வந்தன. இப்பொழுது .Org, .co.in, .in, .biz என 15க்கும் அதிகமானவைகள் உள்ளன.

எமோட்டிகான்ஸ் : ஒரு காலத்தில் எமோட்டிகான்ஸ்(emoticons) என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டு வந்தது. நாளடைவில் அது ஸ்மைலி என்று மாறியது.

டையல் : டையல்(dial) பெரும்பாலும் இன்று யாரும் டையல் போனை பயன்படுத்துவதில்லை. டச் அல்லது டைப் பண்ணும் போன்களே அதிகம் பயன்பாட்டில் உள்ளன. டையல் என்ற வார்த்தையே பயனற்று இருக்கிறது.

ASL : சில வருடங்களுக்கு முன் சாட் செய்யும்பொழுது வயது, பாலினம் மற்றும் இடத்தை பற்றி தெரிந்துகொள்ள ASL(age sex location) என்ற வார்த்தையயை பயன்படுத்துவார்கள். இப்பொழுது அதை யாரும் அதிகம் பயன்படுத்துவதில்லை.

ஈஎம்எஸ் : எஸ்எம்எஸ் உடன் அனிமேஷன் அல்லது சவுண்டு எபெக்ட்களை அனுப்ப ஈஎம்எஸ்(EMS) என்ற சேவை இருந்தது. பின்னாளில் புதிய டெக்னாலஜியுடன் அது எம்எம்எஸ் ஆக மாறியது.

WWW : வெப்சைட் அட்ரஸ்ஸை பயன்படுத்தும் பொழுது WWW என்ற வார்த்தையை பயன்படுத்துவோம். இப்பொழுது உள்ள பிரௌஸர்களில் வெறும் வெப்சைட் பெயரை பயன்படுத்தினாலே போதுமானதாக உள்ளது.

பிளக் அன் பிளே : பிளக் அன் பிளே(Plug-and-Play) என்ற வார்த்தை இப்பொழுது அதிகம் பயன்பாட்டில் இல்லை.

ஆன்லைன் சர்ச் : ஆன்லைன் சேர்ச்(online search)என்று யாரும் அதிகம் சொல்வதில்லை எல்லாமே இப்பொழுது கூகுள் என்று மாறிவிட்டது.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget