பாலிவுட் ஆசையில் கார்த்திகா

மாஜி நடிகை ராதாவின் மகளான கார்த்திகா, பிறந்து வளர்ந்த தெல்லாமே மும்பையில் தான். அதனால், மகளை பாலிவுட்டில் பெரிய நடிகையாக்க வேண்டும் என்பதுதான், ராதாவின் ஆசையாக இருந்தது. ஆனால், அவரது தீவிர முயற்சிக்கு பலன் கிடைக்காததால் தான், தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று, தென் மாநில சினிமா களத்தில் இறக்கிவிடப்பட்டார் கார்த்திகா. இந்நிலையில், தற்போது மூன்று மொழிகளிலும் பரவலாக நடித்து
வரும் கார்த்திகா, "அன்னக்கொடி படத்தில்கதைக்கேற்ப, கவர்ச்சியாகவும் நடித்தார். இதையடுத்து, "இனி கிளாமர் விஷயத்தில் அளவு கோல் வைக்கப்போவதில்லை என்று, தன்னிடம் கதை சொல்லும் இயக்குனர்களிடம் கூறி வரும் கார்த்திகா, மீண்டும் பாலிவுட் கோதாவில் இறங்கவும்,நேரம் பார்த்து வருகிறாராம். இந்தியில் நடித்து  மார்க்கெட்டில் பெரிய நடிகையாக வேண்டும் என்பதுதான், கார்த்திகாவின் பெருங்கனவாம்.

பழைய பதிவுகளை தேட