சூப்பர் ஸ்டார்னா ரஜினி தான் - ஷாரூக் பேட்டி

ஷாரூக்கான்-தீபிகா படுகோனே இந்தியில் நடித்து இன்னும் சில தினங்களில் வெளியாக இருக்கும் ‌படம் சென்னை எக்ஸ்பிரஸ். இப்படம் தென்னிந்தியாவையும் குறிப்பாக தமிழ்நாட்டை மையப்படுத்தியும் நிறைய காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. இப்படத்தை பிரபலப்படுத்தவும், தனியார் நிறுவனம் நடத்திய பேஷன் ஷோ நிகழ்ச்சியில்
பங்கேற்கவும் நேற்று சென்னை வந்திருந்தனர் ஷாரூக்கான் மற்றும் தீபிகா படுகோனே. விழாவில் பங்கேற்ற ஷாரூக்-தீபிகா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். 

அப்போது தீபிகாவிடம், நீங்கள் தமிழில் ரஜினியுடனும் நடித்துள்ளீர்கள், இந்தியில் ஷாரூக்குடனும் நடித்துள்ளீர்கள், இவர்களில் யார் சூப்பர் ஸ்டார் என்று கேட்டனர். அதற்கு தீபிகா, நான் ரஜினி சாருடனும் நடித்துள்ளேன். ஒரு மிகப்பெரிய ஸ்டார் என்று இல்லாது சகஜமாக நடித்தார். அவரைப்பார்த்து ஆச்சர்யப்பட்டேன். இந்தியில் ஷாரூக் உடன் தான் எனது திரை பயணமே தொடங்கியது. என்னைப்பொறுத்தவரை இருவருமே சூப்பர் ஸ்டார்கள் தான் என்றார். 

அதேசமயம் ஷாரூக்கோ, எப்போதும் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் தான், அது ரஜினி மட்டும் தான் என்றார். மேலும் தென்னிந்தியாவில் எனக்கு நிறைய நண்பர்கள் இருப்பதாகவும், சினிமாவில் என்னை வளர்த்துவிட்டவர்களில் இங்குள்ளவர்களுக்கும் பங்கு உள்ளது என்றும், தமிழில் நல்ல கதை அமைந்தால் இங்கும் நடிக்க தயார் என்றும், ரஜினியுடன் இணைந்து நடிக்கவும் தயார் என்று கூறியுள்ளார். 

பழைய பதிவுகளை தேட