கோச்சடையான் கதையும் கோலிவுட் திரையும்

கோச்சடையான் படம் டிராப் என்ற செய்திகளையடுத்து படத்தின் தயாரிப்பாளர் இந்த ஆண்டே படம் ரிலீஸ் ஆகும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் கோச்சடையான் கதை என்ன என்று அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது. வெளியான இந்தக் கதையை சரியென்றே இயக்குனர் சௌந்தர்யா ரஜினிகாந்த்தும் ஆமோதித்துள்ளாராம்!

தந்தை ரஜினிகாந்த் ஒரு நாட்டை திறம்பட நல்லமுறையில் ஆண்டு வருகிறார். நாட்டின் செல்வங்களை மக்களுக்கு பகிர்ந்தளிக்கிறார்.

ஆனால் நல்ல ஆட்சியை நடக்கவிடுவார்களா துரோகிகள்? அவரது அமைச்சரவையிலிருந்தே...

சிலர் அவருக்கு எதிராக சதி செய்கின்றனர். புரட்சி செய்து அசிங்கமான உத்திகளைக் கையாண்டு தந்தை ரஜினியின் ஆட்சியைக் கவிழ்த்து விடுகிறார்கள். 

இப்போதுதான் மகன் ரஜினிகாந்த் பிறக்கிறார். இவர் தனது திறமையான தந்தையின் பயிற்சியில் திறமைசாலியாக வளர்கிறார். பிறகு காட்டில் மறைவாக தனி குழுவொன்றை அமைக்கிறார் மகன் ரஜினிகாந்த். தந்தையின் ஆட்சியை கவிழ்த்த துரோகிகளின் கையிலிருக்கும் நாட்டை மீண்டும் புரட்சி செய்து வெல்கிறார்.

இதுதான் கதையின் மையக்கருவாம்.

ஷார்க் ஒன்றுடன் ரஜினி சண்டையிடும் காட்சி ஹாலிவுட்டின் அவதார், மற்றும் டின் டின்னிற்கு நிகராக படமாக்கப்பட்டுள்ளதாம்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்