பாலிவுட்டை கலக்க வரும் லுங்கி நடனம்

பழமையானவை என, கைவிடப்பட்ட பேஷன்கள் எல்லாம், இப்போது, மறுவடிவம் எடுத்து, புதிய பேஷனாக உருவெடுத்து உள்ளன. இந்த வரிசையில், லுங்கியும் இடம்பிடித்துள்ளது. முன்பெல்லாம், ஆண்கள் வீட்டில் ஓய்வாக இருக்கும்போது, லுங்கி தான், அணிவர். கலாசார மாற்றம் காரணமாக, அரை டிரவுசர், முக்கால்டிரவுசர் போன்றவற்றை அணியத்துவங்கினர். லுங்கி, கிட்டத்தட்டமறக்கடிக்கப்பட்டு விட்டது. 


இந்நிலையில்,ஷாரூக்கான் நடித்துள்ள, "சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில், அவரும், ஹீரோயின் தீபிகாவும், லுங்கி அணிந்து, ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளனர். இது, பிரபலமாகிவிட்டதால், இப்போது, லுங்கி அணிந்து டான்ஸ் ஆடுவது, பாலிவுட்டில் புதியபேஷனாக உருவெடுத்துள்ளது. "மிக்கி வைரஸ் என்ற படத்தில், எல்லிஅவ்ராம் என்ற புதுமுக நடிகை நடிக்கிறார். இந்த படத்தில் இடம் பெறும் ஒரு பாடலுக்கு, முழுக்க முழுக்க லுங்கி அணிந்து தான்,எல்லி அவ்ராம் நடனமாடியுள்ளாராம்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்