ஹாலிவுட் போகும் கோலிவுட் நாயகன் ரஜினி

கோச்சடையான் ஒரு சர்வதேச படம் என்று தீபிகா படுகோனே தெரிவித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தீபிகா படுகோனே நடித்துள்ள படம் கோச்சடையான். இந்த படம் மூலம் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். முதன் முதலாக தமிழ் படத்தில் நடித்துள்ள இந்தி நடிகை தீபிகா இந்த படத்தை பெரிதும் எதிர்பார்க்கிறார்.

கோச்சடையான் ஒரு சர்வதேச படம் என்று தீபிகா தெரிவித்துள்ளார். ஏனென்றால் கோச்சடையான் தமிழ், தெலுங்கி, இந்தி, ஆங்கிலம், ரஷிய மொழி, ஜப்பானிய மொழி, சீன மொழி ஆகியற்றில் ரிலீஸ் ஆகிறது என்றார் தீபிகா. ஆங்கிலத்தில் ரிலீஸ் ஆவதன் மூலம் கோச்சடையான் ஹாலிவுட் செல்கிறார்.

கோச்சடையானில் விஷுவல் எபெக்ட்ஸ் மிகவும் அருமையாக வந்திருக்கிறது. இதுவரை வந்த எந்த இந்திய படத்திலும் இல்லாத அளவுக்கு இந்த படத்தின் விஷுவல் எபெக்ட்ஸ் உள்ளது என்று தீபிகா தெரிவித்துள்ளார்.

கோச்சடையான் படத்தின் டிரெய்லர் ரெடியாகிவிட்டது என்று கூறப்படுகிறது. சீக்கிரம் ரிலீஸ் பண்ணுங்க பாஸ்.

கோச்சடையான் படம் இந்த ஆண்டு இறுதியில் ரிலீஸாகலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் படம் ரஜினியின் பிறந்தநாளன்று வெளியாகுமா என்பது பெரிய கேள்வியாக உள்ளது.

பழைய பதிவுகளை தேட