ஹாலிவுட்டின் கலக்கல் ராணி மேகன் பாக்ஸ்

மேகன் பாக்ஸ், பிரைன் ஆஸ்டின் கி‌ரின் இருவரும் ஹாலிவுட்டில் கொஞ்சம் ஆச்சர்யமான ஜோடி. 2004-ல் இருவரும் டேட்டிங் போக ஆரம்பித்தனர். ஆச்சர்யம் 2010 வரை காதல் கசக்கவில்லை. 2010 திருமணம் செய்து கொண்டனர். இன்னும் இருவரும் ஒன்றாகதான் இருக்கிறார்கள். 2012 செப்டம்பர் 27 ஆம் தேதி இருவருக்கும் முதல் குழந்தை பிறந்தது.

என்னுடைய வாழ்நாளில் நான் விரும்பியது குழந்தையைதான். என்னுடைய வாழ்க்கையை குழந்தைக்காக அர்ப்பணிப்பேன் என்று உணர்ச்சிவசப்பட்டார் மேகன். சொல்லி ஒரு வருடம் முடியவில்லை, தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இந்த முறையும் ஹாலிவுட் அம்மாவுக்கேயு‌ரிய உணர்ச்சிவசப்படல் மேகனிடமிருந்து வெளிப்பட்டிருக்கிறது. இன்னும் குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்லியிருப்பதைப் பார்த்தால், இன்னொரு ஏஞ்சலினா ஜோலியோ என்று ஹாலிவுட் கலவரப்படுகிறது. பெற்றதும் தத்தெடுத்ததுமாக ஜோலிக்கு ஆறு குழந்தைகள்.

மேகனும் ஆஸ்டினும் செம ஜோடியாக இருக்கிறார்களே, ஹாலிவுட்டின் கன்னாபின்னா உறவு இவர்களுக்கு இல்லை என்று மட்டும் நினைக்க வேண்டாம். மேகனுக்குதான் விரைவில் இரண்டாவது குழந்தை பிறக்கப் போகிறது. ஆஸ்டினுக்கு மூன்றாவது. ஆம். ஏற்கனவே 11 வயது பையன் ஒருவன் ஆஸ்டினுக்கு இருக்கிறான்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget