நோக்கியாவின் புதிய லூமியா 4ஜி மொபைல்கள்

நோக்கியா நிறுவனம் தன் லூமியா வரிசையில், புதியதாக 4ஜி அலைவரிசை மொபைல் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. “Lumia 625” என அழைக்கப்படும் இந்த மொபைல் போனில், 4.7 அங்குல சூப்பர் சென்சிடிவ் எல்.சி.டி. ஸ்கிரீன் தரப்பட்டுள்ளது. இதன் மேல் பாகத்தினை ஐந்து வண்ணங்களிலான ஷெல்கள் கொண்டு, விருப்பப்படி மாற்றிக் கொள்ளலாம். 5 எம்பி திறன் கொண்ட கேமரா ஆட்டோ போகஸ் திறனுடனும், எல்.இ.டி. பிளாஷ் கொண்டும் இயங்குகிறது. 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில்
இயங்கும் டூயல் கோர் ப்ராசசர் இதனை இயக்குகிறது. இதன் லித்தியம் அயன் பேட்டரி 2,000 mAh திறன் கொண்டதாக உள்ளது. இதில் நோக்கியா லூமியா 1020 மாடல் போனில் உள்ள கேமர தொழில் நுட்பங்கள் (Nokia Smart Camera and Nokia Cinemagraph) இணைக்கப்பட்டுள்ளன. 

இதன் ராம் நினைவகம் 512 எம்.பி. ஸ்டோரேஜ் 8 ஜி.பி. இதனை 64 ஜிபி வரை அதிகப்படுத்தலாம். இதில் விண்டோஸ் போன் 8 நவீன ஆப்பரேட்டிங் சிஸ்டம் பதிப்பு பதியப்பட்டுள்ளது. இந்த மொபைல் போன் ஒரே நேரத்தில் இந்தியா, சீனா, ஐரோப்பா, ஆசியா பசிபிக், ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் விற்பனைக்கு விரைவில் அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிகிறது. இதன் விலை அப்போது அறிவிக்கப்படும்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget