மொபைல் இயங்குதளத்தை மேம்படுத்தும் முன் கவனிக்க வேண்டியவை?

கூகுள் நிறுவனம் அண்மையில் ஆன்டிராய்ட் ஓஎஸ்ன் புதிய வெர்ஷனான ஆன்டிராய்ட் 4.3 ஜெல்லிபீன் ஓஎஸ்யை வெளியிட்டுள்ளது. கூகுள் நெக்சஸ் 7 மற்றும் நெக்சஸ் 4 உடன் இந்த ஓஎஸ் வெளிவந்தது. எல்ஜியின் நெக்சஸ் 4 மற்றும் ஆசஸ் நிறுவனத்தின் நெக்சஸ் 7 இவை இரண்டும் இந்த புதிய ஓஎஸ்ன் அப்டேட்டை பெற ஆரம்பித்துவிட்டன. ஆன்டிராய்ட் பயனாளிகள் சந்திக்கும் ஒரு பிரச்சனை புதிய ஓஎஸ்கள் வந்தால் நமது மொபைலில் உள்ள ஓஎஸ்
பழசாக உள்ளதே என்ற எண்ணம் வரும். அதற்காக புதிய ஓஎஸ் வெளிவருவதை தடுக்க முடியாது இதற்க்கு ஒரே வழி ஓஎஸ்யை அப்கிரேட் செய்ய வேண்டும் அல்லது அப்படியே விட்டுவிட வேண்டும். ஆனால் அப்கிரேட் செய்வதற்க்கு முன் நீங்கள் சில விஷியஙக்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அது என்ன என்பதை கீழே உள்ள சிலைட்சோவில் பாருங்கள்.

நீங்கள் மொபைலில் உள்ள பழைய ஓஎஸ்யை மாற்றி அதிகாரமற்ற புதிய ஓஎஸ்யை அப்கிரேட் செய்துவிட்டால் உங்கள் மொபைலின் வாரண்டி செல்லாது.

ஓஎஸ் அப்கிரேட் செய்வதற்க்கு முன் போனில் செக்கியுரிட்டி செட்டிங்ஸை அன்லாக் செய்ய வேண்டும்.

புதிய ஓஎஸ் அப்கிரேட் செய்யும் பொழுது உங்கள் மொபைலில் உள்ள டேட்டாவை பேக் அப் எடு்த்து வைத்துக்கொள்ள வேண்டும்.

ஆன்டிராய்ட் அப்ளிகேஷன்களை இன்ஸ்டால் செய்வதற்க்கு தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்.

உங்கள் மொபைலுக்கு ஏற்ற சரியான ஓஎஸ்யை தேர்வு செய்து அப்கிரேட் செய்யுங்கள்.

பைரேட்டேட் ஓஎஸ்களை பயன்படுத்தாதீர்கள்.

ஓஎஸ் அப்கிரேட் செய்வதற்க்கு முன் மொபைலில் உள்ள ஆப்ளிகேஷன்களை சரியாக குளோஸ் செய்துவிட்டீர்களா என்று பார்த்துக்கொள்ளுங்கள்.

ஓஎஸ் அப்கிரேட் செய்யும் பொழுது இன்டெர்நெட் கனெக்ஷன் வேண்டுமெனில் அது சரியாக உள்ளதா என்று உறுதி படுத்திக்கொள்ளுங்கள்.

பேட்டரி எவ்வளவு உள்ளது, போதுமா என்பதையும் பார்த்துக்கொள்ளுங்கள்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget