உலகம் முழுவதும் வெளியாகும் விஜய்யின் தலைவா!

விஜய் நடித்த படங்களில் கடைசியாக நடித்த துப்பாக்கி மெகா ஹிட் என்றால் தலைவாவை அதைவிட பெரிய ஹிட் படமாக்கி விட வேண்டும் என்று விஜய் வட்டாரம் மும்முரமாகியுள்ளது. இந்த நிலையில், படத்திற்கு யு சான்றிதழ் பெறுவதில் சில சிக்கல்கள் ஏற்பட்டது. படத்தில் வன்முறை காட்சிகள் அதிகமாக
இருப்பதாக சொல்லி யு/ஏ சான்றிதழ் வழங்கினார்களாம். அதையடுத்து, அவர்களின் ஆட்சேபனைக்குரிய சில காட்சிகளை கத்தரித்துவிட்டு இப்போது யு சான்றிதழ் பெற்று விட்டனர்.

ஆக, திட்டமிட்டபடி வருகிற 9-ந்தேதி ரசிகர்களுக்கு தரிசனம் கொடுக்க தலைவா விஜய் தயாராகி விட்டார். அதனால் தமிழகமெங்கிலும் பப்ளிசிட்டிகளை தொடங்கி விட்டார்கள். அதோடு விஜய் ரசிகர்கள் கட்அவுட், தோரணங்கள் என்று அமர்க்களப்படுத்த இப்போதே வீறுகொண்டு நிற்கிறார்கள்.

மேலும், இதுவரை விஜய் நடித்த படங்கள் வெளியானதைவிட இந்தமுறை அதிகப்படியான தியேட்டர்களில் வெளியிடப்போகிறார்களாம். தமிழ்நாட்டில் மட்டும் 450 திரையரங்குகள் தயாராக உள்ளதாம். அதோடு, மலேசியாவில் 100 திரையரங்குகள் என்று உலகம் முழுவதிலும் படத்தை திரையிடுகிறார்கள். அப்படி வெளியாகும் ஒவ்வொரு தியேட்டர்களிலும் தாரை தப்பட்டம், கொடி தோரணம் என்று கொண்டாடப்போகிறார்களாம் விஜய் ரசிகர் பட்டாளம்.

பழைய பதிவுகளை தேட