டி.இ.டி. தேர்வு விபரம் அடுத்த வாரம் வெளியாகிறது

ஆசிரியர் தகுதி தேர்வான, டி.இ.டி., தேர்வு குறித்த அறிவிப்பு, அடுத்த வாரம் வெளியாகும்" என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு ஜூலை மற்றும் அக்டோபரில் நடந்த, ஆசிரியர் தகுதி தேர்வுகள் மூலம், 22 ஆயிரத்து 500 பேர், ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இன்னும், 20 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப வேண்டி உள்ளது. இதற்காக, அடுத்த, டி.இ.டி., தேர்வு குறித்த அறிவிப்பை, பட்டதாரிகள் எதிர்பார்த்தபடி உள்ளனர்.