முழுக்க நனைந்த தமன்னா முக்காடு போடுவாரா?

கேடி படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர் மும்பை அழகி தமன்னா. அதன்பிறகு கல்லூரி, வியாபாரி போன்ற படங்களில் நடித்தவரை அயன், பையா, தில்லாலங்கடி போன்ற படங்கள் வெளிச்சம் போட்டு காட்டின. இதனால் விஜய்யுடன் சுறா பட வாய்ப்பினை பெற்றார் தமன்னா. ஆனால் அவர் நேரம் அந்த படம் ஊத்திக்கொண்டது. அதன் தொடர்ச்சியாக தனுசுடன் நடித்த வேங்கையும் வெற்றி பெறாததால், தோல்வி பயம் தமன்னாவை தெலுங்கு, இந்தி சினிமாக்களுக்கு துரத்தியது.