ஸ்வேதாவின் பிரசவ காட்சிக்கு சென்சார் அனுமதி

மலையாள நடிகை ஸ்வேதா மேனனின் நிஜ பிரசவ காட்சிக்கு சென்சார் போர்டு அனுமதி அளித்துள்ளது. தமிழில் அரவான், சிநேகிதியே உள்ளிட்ட படங்களில் நடித்த மலையாள நடிகை ஸ்வேதா மேனன் இந்தி படங்களிலும் நடித்துள்ளார். தற்போது, மலையாளத்தில் களிமண்ணு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பிளஸ்சி இயக்குகிறார். படத்தில் பிரசவ காட்சி ஒன்று உள்ளது.