தல பிரியாணிக்கு அடிமையான நடிகை

சுருதிஹாசன் தற்போது ‘சிறுத்தை’ சிவா இயக்கும் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி, வெவ்வேறு
இடங்களில் படமாக்கப்பட்டு வருகிறது.

அண்ணன்-தங்கை பாசத்தை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தில் லட்சுமிமேனன் அஜித்துக்கு தங்கையாக நடித்து வருகிறார். சுருதிஹாசன் சம்பந்தப்பட்ட காட்சிகளையும் இயக்குனர் படமாக்கி வருகிறார்.

இந்நிலையில், இப்படத்தில் அஜித்துடன் இணைந்து நடிப்பது குறித்து ஸ்ருதிஹாசன் கூறும்போது, அஜித் ஒரு அற்புதமான மனிதர் மட்டும் அல்ல. அவர் திறமையான சமையல் நிபுணரும்கூட. அவருடன் இந்த படத்தில் நடிப்பது ஒரு அழகான அனுபவம் என்று தெரிவித்துள்ளார்.

அதாவது, அஜித் தான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் படக்குழுவினருக்கு தனது கையால் பிரியாணி செய்து, விருந்து படைப்பதில் வல்லவர். இவரது கைவண்ணத்தில் உருவான பிரியாணியை பலரும் ருசித்து சாப்பிட்டு, அஜித்தை பாராட்டியுள்ளனர். இதைத்தான் ஸ்ருதிஹாசன் குறிப்பிட்டு கூறியுள்ளார்.

பழைய பதிவுகளை தேட