ஜோதிகாவின் அசத்தல் பேட்டி

தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதியர் சூர்யாவும், ஜோதிகாவும். ''பூவெல்லாம் கேட்டுப்பார்'' படத்தில் நடித்தபோது அவர்களுக்குள் ஏற்பட்ட
நட்பு, பின்னாளில் காதலாக மாறி, திருமணத்தில் முடிந்தது. திருமணத்திற்கு பிறகு சினிமாவிற்கு முழுக்கு போட்ட ஜோதிகா, எட்டு ஆண்டு இடைவௌிக்கு பிறகு தற்போது 36 வயதினிலே படம் மூலம் மீண்டும் ரீ-என்ட்ரியாகி உள்ளார். மலையாளத்தில் வெற்றி பெற்ற ஹவ் ஓல்டு ஆர் யூ படத்தின் ரீ-மேக்காக கடந்த மே 15ம் தேதி வௌியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஜோதிகாவின் நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர். படமும் நல்ல வசூலை பெற்று இருக்கிறது.

இந்நிலையில், இப்படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. இதில் கலந்து கொண்டு ஜோதிகா பேசியதாவது, ஒரு பெண்ணுக்கு வீடு, கார் எல்லாம் முக்கியம் கிடையாது. குழந்தைகளுடன் அன்பாக பழகி, அவர்களுடன் கொஞ்சம் நேரத்தை செலவழிக்க வேண்டும். அதேப்போல் மனைவியின் தேவையை என்ன என்பதை கணவரும் உணர்ந்து செயல்பட வேண்டும். குறைந்தது 30 நிமிடமாவது அவர்களுடன் அன்பாக பேசி, அவர்களுக்கான தேவையை செய்ய வேண்டும். மனதுக்கு திருப்தியான ரோல் கிடைத்தால் கண்டிப்பாக தொடர்ந்து நடிப்பேன் என்றார்.

பழைய பதிவுகளை தேட