வில்லனுக்கு மனைவியான சிஜா

கோழிகூவுது, மாசாணி படங்களில் நடித்த சிஜா ரோஸ். சமீபத்தில் வெளிவந்த றெக்க படத்தில் குணசித்திர நடிகையாக ரீ எண்ட்ரி கொடுத்தார். 
அதில் அவர் விஜய் சேதுபதியின் அக்காவாக நடித்தார். அது சிஜாவுக்கு நல்ல அடையாளத்தை கொடுத்தது.

தனது ஹீரோயின் ஆசையை தூக்கிபோட்டுவிட்டு குணசித்திர வேடங்களில் நடிக்க முடிவு செய்து விட்டார். தற்போது விஜய், கீர்த்தி
சுரேஷ் நடிக்கும் பைரவா படத்தில் நடித்து வருகிறார். அதில் அவர் வில்லன் ஹரிஷ் உத்தமன் மனைவியாக நடிக்கிறார். "விஜய் சார் ஜோடியாக நடிக்கும் கனவில்தான் சினிமாவுக்கு வந்தேன். நினைப்பதெல்லாம் நடந்து விடுகிறதா? என்றாலும் அவரது படத்தில் நடிப்பது சந்தோஷமாக இருக்கிறது. படத்தின் கேரக்டர் பற்றி இப்போது எதுவும் சொல்ல முடியாது. ஆனால் அதிக காட்சிகளில் வருகிற முக்கியமான கேரக்டர். தொடர்ந்து இதுபோன்ற நல்ல கேரக்டர்களை தேர்வு செய்து நடிக்க இருக்கிறேன். சில மலையாள படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினேன். விரைவில் ஒரு படம் இயக்குவேன்" என்றார் சிஜா ரோஸ்.

பழைய பதிவுகளை தேட