கோலிவுட் பொண்ணு ஸ்ரீதிவ்யா கலக்கல் பேட்டி

இதழ் வரிகளில் இருப்பதெல்லாம் அழகின் முகவரிகள்... விழிகளின் விளிம்பில் விரிவதெல்லாம் மயிலின் தோகைகள்... நெற்றி பரப்பில் நெளிவதெல்லாம் கருங்கடலின் அலைகள்... தேக தேசத்தில் தேய்ந்ததெல்லாம் நிலவின் நிறங்கள்... இடை வெளிகளில் ஒளிந்ததெல்லாம் மெல்லினத்தின் மவுனங்கள்... என, ரசிகர்கள் வர்ணிக்கும் ' வெள்ளைக்கார பொண்ணு' ஸ்ரீதிவ்யா 'நமது' வாசகர்களுக்காக சிரித்து சிதறிய
பேச்சு துளிகள்...

* 'காஸ்மோரா' ரெடியா ?

தீபாவளிக்கு ரிலீஸ் ஆகுது... கார்த்தி நடிப்பில் படம் சூப்பரா வந்திருக்கு. ரசிகர்களுடன் தியேட்டர்ல பார்க்க நானும் ரெடி.


* காமெடில பின்றீங்களே...

இயக்குனர் பொன்ராமின் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்திற்கு பின், 'வெள்ளைக்கார துரை' படத்தில் விக்ரம் பிரபுவுடன் காமெடி பண்ணியிருக்கேன். எப்பவுமே சிரிச்ச முகத்தோட இருக்குற இயக்குனர் எழில் படங்களில் காமெடிக்கு பஞ்சமே இருக்காது... அதுக்கு இந்த படமும் ஒரு உதாரணம்.

* 'மருது' திவ்யா...

இயக்குனர் முத்தையா படங்களில் ஹீரோயின் கேரக்டர் ரொம்ப போல்டா இருக்கும். எனக்கும் அப்படி ஒரு கேரக்டர் தான் இந்த படத்துல இருந்தது. விஷாலின் ஆக்ஷன், சூரியின் காமெடி என படம் முழுக்க ஜாலியா போனது.

* ஊதா கலரு ரிப்பன்...

இசையமைப்பாளர் இமானுக்கு தான் நன்றி சொல்லணும். முதல் படத்திலயே எனக்கு இப்படி ஒரு பாட்டு அமையும்னு நினைச்சு கூட பார்க்கலை. இந்த பாட்டும், படமும் என் வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

* பாலிடிக்ஸ் பேசுவீங்களா...

அதெல்லாம் பேசுனது இல்லை. ஆனால், நம் நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு குறைஞ்சுகிட்டே வருது. அதனால, பெண்களின் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கணும்.

* உங்கள் பிளஸ், மைனஸ்

காலை முதல் இரவு வரை நடிக்க சொன்னா கூட நடிச்சுகிட்டே இருப்பேன். இப்படி ஹார்டு ஒர்க் செய்து நடிக்குறது என்னோட பிளஸ். நான் நினைச்ச விஷயம் நடக்கலேன்னா பீல் பண்ணியே 'அப்செட்' ஆகுறது என் மைனஸ்.

* பொழுது போக்கு...

டைம் கிடைக்கும் போதெல்லாம் நல்லா துாங்குவேன், படம் பார்ப்பேன்... பாட்டு கேட்பேன்.

* கிச்சன் பக்கம் போவீங்ளா...

என்ன இப்படி கேட்டுடீங்க! சுவீட் பாயாசம், ஆந்திரா சிக்கன் கறி பண்ணுவேன்.

* மதுரை...

நிறைய ரசிகர்கள் இருக்காங்க... தேனி, ராஜபாளையம் கூட வந்திருக்கேன்.

* உங்கள் நடிப்பில் அடுத்து...

சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷாலுடன் 'மாவீரன் கிட்டு', ஜீவாவுடன் 'சங்கிலி புங்கிலி கதவ திற...' படம் பண்றேன்.

* தீபாவளி சரவெடி...

வெடி எல்லாம் நான் வெடிக்க மாட்டேன்ப்பா; ரொம்ப பயம். யாராவது வெடிச்சா வேடிக்கை பார்ப்பேன். வீடு முழுக்க தீபங்கள் ஏற்றி வைச்சு அழகு பார்ப்பேன்... எல்லோருக்கும் 'ஹேப்பி அன்ட் சேப்டி' தீபாவளி...
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget