சமத்து புள்ள சமந்தா

நாகசைதன்யாவுடனான திருமணம் இருவீட்டார் சம்மதத்துடன் உறுதியாகி விட்டதால், கமிட்டான படங்களில் இருந்து வெளியேறினார் சமந்தா. அதேசமயம், நடிக்கத் தொடங்கியதில் இருந்தே கடை திறப்பு விழாக்களில்
கலந்து கொண்டு வருவதை மட்டும் இன்னும் அவர் தொடர்ந்து வருகிறார். இந்நிலையில் நேற்று சேலத்தில் உள்ள ஒரு நகை கடை திறப்பு விழாவுக்கு வருகை புரிந்துள்ளார் சமந்தா.


இதற்கு முன்பு அவர் நகை கடை திறப்பு விழாக்களில் பங்கேற்றபோது எப்படி ரசிகர்கள் கூட்டம் படையெடுத்ததோ அதேபோன்று இந்த நகை கடை திறப்பு விழாவிற்கு சமந்தா வருகிறார் என்கிற செய்தி பரவியதும், ஏராளமான ரசிகர்கள் அந்த ஏரியாவுக்கு அணிவகுத்து விட்டார்களாம். இதனால் ரசிகர்கள் கூட்டத்திற்கு நடுவே காரில் நீந்திச்சென்ற சமந்தாவினால் காரை விட்டு இறங்க முடியவில்லையாம். ரசிகர்கள் ஆட்டோகிராப் கேட்டு முண்டியடித்ததால் வெளியில் வந்தால் கூட்டத்தில் சிக்கிக்கொள்வோம் என்று காருக்குள்ளேயே இருந்து கொண்டாராம் சமந்தா.

அதையடுத்து, அங்கு போலீசார் விரைந்து சென்று கூட்டத்தை அப்புறப்படுத்தி சமந்தாவை காரில் இருந்து இறக்கி நகை கடைக்குள் அழைத்து சென்றார்களாம். இதற்கு முன்பு இந்த மாதிரி கடை திறப்பு விழாக்களுக்கு செல்லும்போது ரசிகர்களின் சீண்டல்களை சிக்கிய அனுபவம் பெற்ற சமந்தா, இந்த முறை ரொம்ப கவனமாக சென்று ரிப்பன் கட் பண்ணி விட்டு திரும்பியிருக்கிறார்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget