நடுநிலை பள்ளிகளுக்கு 1,267 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் - முதல்வர் உத்தரவு!


இந்த கல்வி ஆண்டிலேயே நடுநிலைப் பள்ளிகளில் 1,267 பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட அறிக்கை: எல்லா பள்ளிகளிலும் தேவையான அளவு ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கி, அரசு பணி நியமனம் செய்து வருகின்றது.

இதன் அடிப்படையில், அனைவருக்கும் கல்வி என்ற திட்டத்தின் கீழ் 2009-10ம் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட 831 நடுநிலைப் பள்ளிகளுக்கு ஒரு பட்டதாரி ஆசிரியர் வீதம், 831 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், 2010-11ம் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட 218 நடுநிலைப் பள்ளிகளுக்கு, பள்ளி ஒன்றுக்கு 2 பட்டதாரி ஆசிரியர்கள் வீதம் 436 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், என மொத்தம் 1,267 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை இந்த கல்வி ஆண்டிலேயே (2011-12) தோற்றுவிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.


மேலும், பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் கல்வி கற்பதற்கு ஏற்ற வகையிலான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் நோக்கத்தில், அரசு உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்குத் தேவையான சாய்வு மேஜை, நீள் இருக்கை, மேஜை மற்றும் நாற்காலி முதலான இருக்கைகளை வாங்க ரூ.36 கோடியே 17 லட்சம் ஒதுக்கீடு செய்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget