அஜித் நடிப்பில் கடந்த 2007ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் பில்லா. அப்படத்தின் தொடர்ச்சியாக பில்லா-2 படம் உருவாகி வருகிறது. தூத்துக்குடியில் சாதரண மனிதனாக, டேவிட்டாக இருந்தவர் எப்படி பில்லாவாக மாறுகிறான் என்பதே பில்லா-2 படத்தின் கதை. இதில் டேவிட்டாக அஜித் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பார்வதி ஓமணக்குட்டன் நடிக்கிறார். உன்னைப்போல் ஒருவன் படத்தை இயக்கிய சக்ரி டோல்டி இயக்குகிறார்.
இன்எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஓய்டு ஆங்கிள் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் சூட்டிங் கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது. விரைவில் திரைக்கு வர இருக்கிறது.பில்லா-2 திரை முன்னோட்டம்