ஆகாஷைத் அடுத்து குறைந்த விலைக்கு கிடைக்கும் புதிய டேப்லெட்!


இந்திய மாணவர்களுக்காகவே வரவிருக்கும் குறைந்த விலை டேப்லெட்டான ஆகாஷ் மாணவ சமுதாயத்தின் கவனத்தை மிக வெகுவாகவே ஈர்த்திருக்கிறது. இந்த டேப்லெட் இன்னும் சந்தைக்கு வரவில்லை என்றாலும் இந்தியாவில் உள்ள ஒரு சில பள்ளிகளில் உள்ள மாணாக்கருக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த குறைந்த விலை டேப்லெட்டின் ஒரு சில குறைகள் இருந்தாலும் இதன் செயல் திறன் பக்காவாக இருக்கிறது.

இப்போது வந்திருக்கும் செய்தி என்னவென்றால் ஆகாஷைத் தொடர்ந்து இப்போது இன்னும் ஒரு புதிய குறைந்த விலை டேப்லெட் வரவிருக்கிறது என்பதாகும். இதை அறிவித்திருப்பது டெல்லியைச் சேர்ந்த க்ளாஸ் டீச்சர் லேர்னிங் சிஸ்டம்ஸ் ஆகும். இந்த புதிய டேப்லெட்டின் பெயர் க்ளாஸ்பேட் ஆகும். இந்த புதிய டேப்லெட் ஆகாஷ் அளவிற்கு குறைந்த விலையில் இல்லை என்றாலும் ஆகாஷைவிட ஏராளமான சிறப்பு அம்சங்களைக் கொண்டிருக்கிறது.
இந்த க்ளாஸ்பேட் டேப்லெட் கெப்பாசிட்டிவ் தொடு திரையைக் கொண்டிருக்கிறது. இதன் ப்ராசஸர் 1.3 ஜிஹெர்ட்ஸ் ஆகும். மேலும் இதன் இன்ட்ர்னல் மெமரி 4 ஜிபி ஆகும். இந்த இன்டர்னல் மெமரியை 8 ஜிபி வரை அதிகரிக்க முடியும். இந்த டேப்லெட் ஆன்ட்ராய்டு 2.2 இயங்கு தளத்தில் இயங்குகிறது. மேலும் இந்த டேப்லெட் க்ளாஸ்போட் 7, க்ளாஸ்பேட்8 மற்றும் க்ளாஸ்பேட்10 போன்ற 3 மாடல்களில் வருகிறது.
இந்த க்ளாஸ்பேட் டேப்லெட் எளிமையாக இருந்தாலும் பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கிறது. மாணவர்கள் இதை மிக எளிதாக எடுத்துச் செல்ல முடியும். மேலும் இந்த டேப்லெட் மிக உறுதியாக உள்ளது. நீண்ட ஆயுளைக் கொண்டிருக்கிறது. இதன் ப்ராசஸரின் கடிகார வேகம் 1.3 ஜிஹெர்ட்ஸ் ஆகும். இந்த டேப்லெட் கல்வி மற்றும் பொழுதுபோக்க அம்சங்களைக் கொண்டிருக்கிறது. இதன் தொடுதிரையும் பெரியதாக உள்ளதால் இதில் உள்ள டெக்ஸ்ட்டுகளை மிக எளிதாகப் பார்க்க முடியும்.
க்ளாஸ்பேட் டேப்லெட்டின் பேஸ் மாடல் ரூ.7,500ல் வருகிறது. இதன் உயர் தர மாடல் ரூ.14,000ல் வருகிறது. ஒரு வேளை இந்திய அரசாங்கம் இந்த டேப்லெட்டிற்கு மானியம் வழங்கினால் இது மாணவர்களுக்கு குறைந்த விலையில் கிடைக்கும்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget