பொறுப்புக் காப்பீடு ( liability insurance ) இது ஒரு பரந்த அமைப்பு. சட்ட பூர்வமாகக் காப்பீடு செய்தவர்களின் இழப்பீடை கவனிப்பது.பல விதமான காப்பீடுகள் சட்டரீதியான ஏதாவதொரு காரியத்தைக் கொண்டுள்ளதாக இருக்கும். உதாரணமாக வீட்டு சொந்தக்காரரின் காப்பீடு பாலிசி, சாதாரணமாக அவருடைய இடத்தில்
யாரோ ஒருவர் கீழே விழுந்ததினால் உண்டான இழப்பிற்காக ஈடு கேட்கும்போது காப்பீடு செய்தவருக்கு பாதுகாப்பு அளிக்கும் விதத்தில் உள்ளது.வாகனக் காப்பீடும் ஒரு விதத்தில் பொறுப்புக் காப்பீடுதான்.கார் மோதியதால் அடுத்தவரின் ஆரோக்கியம் , சொத்து சேதாரம், உயிரிழப்பு போன்ற தீங்கு வரும்போது பொறுப்பு ஏற்கிறது.பொறுப்புக் காப்பீட்டால் தரப்படும் காப்பீடு இரண்டு மடிப்புகளைக் கொண்டது. பாலிசி தாரருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப் படும்போது பாதுகாப்பு அளிப்பது மற்றும் காப்பீட்டாளரின் தரப்பில் இருந்து ஒரு முடிவுக்கு வரும் பட்சத்தில் அல்லது நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் பணம் செலுத்தும் முழு பொறுப்பு இந்தப் பாலிசிகள் நிச்சயமாக காப்பீடின் அலட்சியத்தினாலேயே சேர்த்துக் கொள்ளப்படுகிறது.மற்றபடி விரும்பியோ அல்லது உள்நோக்கத்துடன் காபபீடுசெய்தவரால் விளைவுகள் ஏற்ப்பட்டால் இந்தப் பாலிசி அதை ஏற்றுக் கொள்வதில்லை.
- இயக்குனர் மற்றும் அதிகாரிகள் பொறுப்புக் காப்பீடு: இயக்குனர் மற்றும் அதிகாரிகளின் தவறால் விளையும் சட்டரீதியான பிரச்சினைகளுக்கு நிறுவனத்திற்கும், கார்ப்பரேஷன்களுக்கும் பாதுகாப்பு அளிப்பது. தொழில்துறையில் இது "D&O" என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது.
- சுற்றுச் சூழல் பொறுப்புக் காப்பீடு :தொழில்கழிவுகள்,தூக்கி எறிந்தவைகள், திடீரென வரும் மாசுக்களால் விளையும் உடல்காயம் ,சொத்து சேதாரம் மற்றும் சுத்தப் படுத்துதல் போன்றவற்றிற்கான பாதுகாப்பு.
- தவறுகள் மற்றும் விட்டு விடுதலுக்கான காப்பீடு.தொழில் பொறுப்புக் காப்பீடைப் பார்க்கவும்.
- விலை முழுமைப்படுத்தும் காப்பீடு :ஒரு குறிப்பிட்ட நிகழ்வுக்காக பெரிய பரிசுகள் / விலைகள் கொடுப்பதால் காப்பீட்டாளருக்குப்பாதுகாப்பு . உதாரணமாக கோல்ப் விளையாட்டில் ஓர் அடியில் ஜெயிப்பது,கூடைப் பந்தில், அரைக் கோர்ட்டில் இருந்து ,கோல் போடும் போட்டியாளர்களுக்கு என்று கொள்ளலாம்.
- தொழில் திறமையான பொறுப்புக் காப்பீடு :இது புரபெசனல் இண்டேமிநிட்டி காப்பீடு என்றும் அழைக்கப்படுகிறது.கட்டிட வடிவமைப்பாளர் கழகம் ,மற்றும் மருத்துவம் செய்பவர், தகுதியுள்ள , அலட்சியப்படுத்தப்பட்ட இழப்பீடுகளை நோயாளிகள் வாடிக்கையாளர்கள்,/உரிமையாளர்கள் கேட்கும் நிலையில் காப்பது. இந்தக் காப்பீடு , செய்யப்படும் தொழிலுக்கு ஏற்ப வேறு பெயர்களில் அறியப் படுகிறது. உதாரணமாக மருத்துவத் துறை சம்பந்தப்பட்ட காப்பீடுமால் பிராக்டிஸ் காப்பீடு என்று அழைக்கப்படுகிறது.நோட்டரி பப்ளிக் தவறுகள் மற்றும் விட்டுவிடுதல் காப்பீடை E&O எனக் கொள்கிறது இதில் சேர்க்கப்பட்டுள்ள மற்ற E&O பாலிசிதாரர்கள், ரியல் எஸ்டேட் புரோக்கர்கள், காப்பீடு முகவர்கள், அப்ரைசர்கள் மற்றும் வலைதளம் உருவாக்குபவர்கள்.