பொறாமையா...! எனக்கா...!! ரிச்சாவின் ரிச்சான பேட்டி!

மயக்கம் என்ன படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு புதிய வரவாக வந்திருப்பவர் நடிகை ரிச்சா கங்கோபாத்யா. முதல்படத்திலேயே தனுஷூடன் ஜோடி போட்டு அற்புதமான நடிப்பை வெளிப்படுதினார். அடுத்து சிம்புவுடன் ஒஸ்தியில் நடித்தார். சமீபத்தில் தான் இந்த இரண்டு படங்களும் வெளிவந்து, ஓரளவுக்கு அவருக்கு பெயரை பெற்று தந்தது. அழகான சிரிப்பாலும், அம்சமான உடல் அமைப்பாலும் இ‌ன்றைய இளம் நடிகைகளுக்கு மத்தியில் போட்டி போட்டிக்கொண்டு முன்னணி நடிகையாக வரத்துடிக்கும்
ரிச்சா, தனக்கு பிடித்தது, பிடிக்காதது உள்ளிட்ட பல விஷயங்களையும் நம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளார். இதோ...




நிஜ பெயர் : ஆன்ட்ரா


சினிமா பெயர் : ரிச்சா கங்கோபாத்யா


பிறந்தது : டில்லி, வளர்ந்தது அமெரிக்கா


படித்தது : நியூட்ரிஷியன்


முதல்படம் : லீடர் (தெலுங்கு)


முதல் படம் வெளியூர் சூட்டிங் : ‌மிற்பவே (தெலுங்கு) சூட்டிங், ஆஸ்திரியா போனது


மறக்கமுடியாத நபர் : அப்பா, அம்மா


அதிகமுறை பார்த்த படம் : கல்கோனா ஹோ (இந்தி)


அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை : ஸோ... யா...


பிடித்த உணவு : தாய் உணவு வகை


தவிர்க்க விரும்புவது : நான் நியூட்ரிஷியன் படித்ததால், உணவு வகைகளில் ‌க‌ரெக்டா எடுத்துக்குவேன்


போக விரும்பிய வேலை : பெரிய மருத்துவமனையில் வேலைக்கு சேர நினைத்தேன்


பிடித்த கலர்/உடை : மஞ்சள் / ஜீன்ஸ் - டி-சர்ட்


எதைப்பார்த்தால் பொறாமை வரும் : பொறாமையா... எனக்கா... அப்படி எல்லாம் வராது


பயப்படுவது : எட்டுக்கால் பூச்சியை பார்த்த கத்திடுவேன்


அடிக்கடி ஞாபகத்துக்கு வர்ற விஷயம் : அமெரிக்காவில் இருந்தபோ, 2007ல் மிஸ் இந்தியா பட்டம் பெற்றது.


வெளிப்படையாக பேசி, மற்றவர்களிடம் மாட்டிக்கொண்ட அனுபவம் : ஓப்பனா நிறைய பேசுவேன், ஆனால் மாட்டிக்க மாட்டேன், எஸ்கேப் தான்


நன்றி சொல்ல விரும்புவது : என்னை இவ்வளவு தூரம் கொண்டு வந்த ஒவ்வொருத்தருக்கும் நன்றி.


நினைவில் இருக்கும் பள்ளி ஆசிரியர் : திருமதி.பிரான்சிஸ், திருமதி.போகான்.(அமெரிக்கா)


பயன்படுத்தும் சோப்பு : செயற்கை அல்லாத சோப் வகைகள்


அதிக உடைகள் வாங்கும் இடம் : குறிப்பிட்ட இடம் என்று எதுவும் சொல்ல முடியாது. நல்லா இருந்தா தெருவோரம் கூட ஷாப்பிங் பண்ணுவேன்


உணவுப்பழக்கம் தினமும் : முட்டை வெள்ளைக் கரு, பிரவுன் பிரட், கிரீட் டீ


உணர்ச்சி வசப்பட்டால் : நல்லா அழுவேன், அப்படியே தூங்கிடுவேன்


கிடைச்ச பாப்புலாரிட்டியை வைத்து உருப்படியா செய்ய நினைப்பது : அமெரிக்காவில் இருக்கும் போது, 14 வயசில் இருந்தே யூத் சோசியல் அமைப்பில் இருக்கேன். அது எனக்கு புதிதல்ல.


உங்க ப்ளஸ் : ரொம்ப பாஸிட்டிவ்வா இருப்பேன்


உங்க மைனஸ் : கொஞ்சம் உணர்ச்சி வசப்படுவேன்


பிடிவாதம் : சின்ன வயசுல இருந்துச்சு, இப்ப இல்ல.


மறக்க முடியாத நாள், வருஷம் : தெலுங்கு பட அறிமுகம்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget