பீர் பிரியர்களே உங்களுக்கான மப்பான மேட்டர்


பீர் பிரியர்களை இந்த புத்தாண்டில் போதையில்...ஸாரி!மகிழ்ச்சியில் ஆழ்த்தும் ஒரு செய்தி-மிதமாக பீர் அருந்தி வந்தால் இருதய நோய் அருகில் அண்டாது-என்பதுதான்! நாளொன்றுக்கு ஒன்று அல்லது இரண்டு கிளாஸ் என்ற கணக்கில் மிதமாக பீர் அருந்தி வந்தால்,அது மாரடைப்பு உள்ளிட்ட இருதய நோய்கள் வராமல் தடுக்கும் என்று சமீபத்தில் நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. உலகம் முழுவதும் குடி பழக்கம் உள்ள சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானோரிடம் இத்தாலியை
சேர்ந்த ஆய்வு நிறுவனம் ஒன்று, வெவ்வேறு ஆய்வுகளை மேற்கொண்டது. இந்த ஆய்வில் மிதமாக பீர் மட்டும் அருந்தி வருபவர்களுக்கு,மிதமான அளவில் ஒயின் அருந்துபவர்களை காட்டிலும்,இருதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு 31 விழுக்காடு குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது. 


பீர் ஏன் உடலுக்கு நல்லது என்பதை பற்றி கூறும் பிரபல இருதயவியல் நிபுணர் ஹஷ்முக் ரவத்,"கொழுப்பு மற்றும் நார் சத்து அற்ற பீரில் சிறிது புரத சத்து உள்ளது.கார்போஹைட்ரேட், பொட்டாசியம், மெக்னீசியம் மற்ரும் வைட்டமின் பி, ஃபோலிக் அமிலம் உள்ளிட்ட சத்துக்கள் அதிக அளவில் உள்ளன.இவை ரத்தத்தில் உள்ள 'ஹோமோசைஸ்டீன்' அளவை குறைக்கும் வல்லமை படைத்தவை.ரத்தத்தில் 'ஹோமோசைஸ்டீன்' அளவு அதிகரிப்பதுதான் மாரடைப்பு உள்ளிட்ட பல்வேறு இருதய நோய்களுக்கு வித்திடுகிறது"என்கிறார். மேலும் பீரில் இயற்கையிலேயே 'ஆண்டியாக்ஸிடண்ட்ஸ்' உள்ளதால், அவை உடலில் செல்களை புதுப்பிக்க வெகுவாக உதவுவதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர். 


அதே சமயம் ஏற்கனவே மொடா குடியர்களாக இருப்பவர்களும்,இருதய நோய் வராமல் தடுக்கிறேன் பேர் வழி என்று வழக்கமாக அருந்தும் பிராந்தி,விஸ்கியோடு சேர்த்து பீரையும் உறிஞ்சி தள்ளினால், வயிறு வீங்கி,உடல் மேலும் பல கோளாறுகளை வா...வா...என்று வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கும். எனவே பிராந்தி, விஸ்கி போன்றவற்றையெல்லாம் விட்டுவிட்டு,பீரை மட்டும் அளவோடு அருந்திவந்தால், "பீர் இஸ் சீக்ரெட் ஆப் மை எனர்ஜி!" என்று நீங்களும் நெஞ்சை நிமிர்த்தி சொல்லாம்! 

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget