சென்னை: சமச்சீர் கல்வி அமல்படுத்தப்பட்ட பின்னர் முதல் முறையாக நடைபெறும் பத்தாம் வகுப்புதேர்வுக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் வரும் ஏப்ரல் 4ம் தேதி துவங்கி ஏப்ரல் 23ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வினை தமிழகம் முழுவதும் பத்து லட்சம் மாணவ மாணவியர்கள் எழுதுகின்றனர்.
இதற்கான விரிவான ஏற்பாடுகளை தமிழக பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.
ஏப்ரல்4ம் தேதி தமிழ் முதல் தாள் தேர்வு
ஏப்ரல்9ம் தேதி தமிழ் இரண்டாம் தாள் தேர்வு
ஏப்ரல்11ம் தேதி ஆங்கிலம் முதல் தாள் தேர்வு
ஏப்ரல்12ம் தேதி ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வு
ஏப்ரல்16ம் தேதி கணிதம்
ஏப்ரல்19ம் தேதி அறிவியல்
ஏப்ரல்23ம் தேதி சமூக அறிவியல்
மெட்ரிக் பள்ளி தேர்வுகளுக்கான அட்டவணை அறிவிப்பு: பழைய பாடதிட்டத்தின் கீழ் தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கான மெட்ரிக் பள்ளிகளுக்கான பத்தாம் வகுப்பு தேர்வு தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வுகளும் ஏப்ரல் 4ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடைபெறுகிறது.
ஏப்ரல்4ம் தேதி மொழி முதல் தாள்
ஏப்ரல்9ம் தேதி மொழி இரண்டாம் தாள்
ஏப்ரல்10ம் தேதி ஆங்கிலம் முதல் தாள்
ஏப்ரல்11ம் தேதி ஆங்கிலம் இரண்டாம்தாள்
ஏப்ரல்12ம் தேதி கணிதம் முதல் தாள்
ஏப்ரல்16ம் தேதி கணிதம் இரண்டாம் தாள்
ஏப்ரல்17ம் தேதி அறிவியல் முதல் தாள்
ஏப்ரல்19ம் தேதி அறிவியல் இரண்டாம்தாள்
ஏப்ரல்19ம் தேதிவரலாறு,குடிமையியல்
ஏப்ரல்23ம் தேதி புவியியல்,பொருளாதாரம்
ஓ.எஸ்.எல்.சி., தேர்வு: ஓ. எஸ்.எல்.சி., தேர்வுகளுக்கான அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. பழைய பாடதிட்டத்தின் கீழ் தேர்வு எழுதும் தனித்தேர்வுகளுக்கான அட்டவணையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுகளும் ஏப்ரல் 4ம் தேதி துவங்கி 23ம் தேதி முடிவடைகிறது.
ஏப்ரல்4ம் தேதி தமிழ்
ஏப்ரல்9ம் தேதி முதன்மை மொழி முதல் தாள்( சமஸ்கிருதம்,அரபி)
ஏப்ரல்10ம் தேதி முதன்மைமொழி இரண்டாம் தாள்( சமஸ்கிருதம்,அரபி)
ஏப்ரல்11ம் தேதி ஆங்கிலம் முதல் தாள்
ஏப்ரல்12ம் தேதி ஆங்கிலம் இரண்டாம் தாள்
ஏப்ரல்16ம் தேதி கணிதம்
ஏப்ரல்17ம் தேதி மொழி மூன்றாம் தாள்( சமஸ்கிருதம்,அரபி)
ஏப்ரல்19 ம் தேதி அறிவியல்
ஏப்ரல்23ம் தேதி சமூக அறிவியல்
ஆங்கிலோ இந்தியன் தேர்வுகள்: ஆங்கிலோஇந்தியன் தேர்வுகளுக்கான தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளன. பழைய பாடதிட்டத்தின் கீழ் தனிதேர்வுக்கான அட்டவணைகள் அறிவிக்கப்பட்டுள்ளத. தேர்வு ஏப்ரல் 4ம் தேதி துவங்கி ஏப்ரல் 23ம் தேதி முடிகிறது.
ஏப்ரல்4ம் தேதி மொழி தாள்
ஏப்ரல்9ம் தேதி ஆங்கிலம் முதல் தாள்
ஏப்ரல்10ம் தேதி ஆங்கிலம் இரண்டாம் தாள்
ஏப்ரல்11ம் தேதி கணிதம் முதல் தாள்
ஏப்ரல்12ம் தேதி கணிதம் இரண்டாம் தாள்
ஏப்ரல்16ம் தேதி அறிவியல் முதல் தாள்
ஏப்ரல்17ம் தேதி அறிவியல் இரண்டாம் தாள்
ஏப்ரல்18ம் தேதி சமூக அறவியல், குடிமையியல்
ஏப்ரல்23ம் தேதி புவியியல்