நடிகர் விஜய் நடித்து வரும் துப்பாக்கி படத்தை திடீரென நிறுத்துவதாக இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் அறிவித்துள்ளது விஜய் ரசிகர்களை கோபமடைய செய்திருக்கிறது. திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும் திரைப்படத் தொழிலாளர் சம்மேளமான பெப்சிக்கும் இடையேயான மோதலால் தமிழ் திரைப்பட உலகம் முடங்கியுள்ளது.
இந்நிலையில் கலைப்புலி தாணு தயாரிப்பில் மும்பையில் விஜய்யை வைத்து ஏ.ஆர். முருகதாஸ் "துப்பாக்கி" என்ற படத்தை இயக்கி வந்தார்.
பெப்சி- தயாரிப்பாளர்கள் சங்க மோதல் நீடித்து வரும் நிலையில் திடீரென முருகதாஸ் அறிவித்திருப்பது விஜய் மற்றும் அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
பெப்சி, தயாரிப்பாளர் சங்க மோதல் எதிரொலியாக பல முக்கியப் படங்களின் படப்பிடிப்பு நடைபெற முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இயக்குநர் முருகதாஸ், தானாக முன்வந்து துப்பாக்கி படத்தின் ஷூட்டிங்கை காலவரையின்றி நிறுத்தி வைத்திருப்பது விஜய் தரப்பை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து விஜய்யிடம் முருகதாஸ் பேசினாரா என்பது தெரியவில்லை.
தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ்.ஏ.சந்திரேசகரின் மகன் படமே படப்பிடிப்பைத் தொடர முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது பெப்சி தொழிலாளர்களிடையே கேலியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.