சிம்பு எப்போது என்னை அழைத்தாலும் அடுத்த விநாடியே அவருக்கு டேட் கொடுக்க நான் தயார். அவரைப் பற்றி யார் என்ன சொன்னாலும் எனக்குக் கவலை இல்லை என்று அதிரடியாக கூறியுள்ளார் நடிகை தீக்ஷா சேத். தெலுங்கில் நடித்துக் கொண்டுள்ள தீக்ஷா, தமிழில் ராஜபாட்டை படம் மூலம் அறிமுகமானார். விக்ரமுடன் இணைந்து கலக்கிய அவர் தற்போது சிம்புவைக் குறி வைத்துள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் சிம்பு ஒரு பிரச்சனை பிடித்த ஆள். சிம்பு என்றாலே வம்பு தான். அதனால் அவருடன் நடிக்கும் போது எச்சரிக்கையாக இருக்கவும் என்று யாரோ தீக்ஷாவுக்கு அட்வைஸ் செய்துள்ளார்கள் போல. ஆனால் அதை ஒரேயடியாக நிராகரித்து விட்டாராம் தீக்ஷா.
இதுகுறித்து அவர் கூறுகையில், நான் சிம்புவின் தீவிர ரசிகை. அவரைப் பற்றி யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டேன். அவர் தன்னுடைய புதிய படத்தில் நடிக்க அழைத்தால், எப்போது கூப்பிட்டாலும் நான் உடனே ஒத்துக் கொள்வேன். அடுத்த விநாடியே அவருக்காக டேட் கொடுக்க உடன்படுவேன் என்று கூறியுள்ளார்.
தீக்ஷா இப்படி புல்லரித்துக் கூறியதைக் கேட்டு சிலிர்த்துப் போய் விட்டாராம் சிம்பு. உடனே, தனது வேட்டை மன்னன் படத்தில் தீக்ஷாவைப் போடுமாறு கூறி விட்டாராம்.
தீக்ஷா பிழைத்துக் கொள்வார்..