பாதாள உலகம்4 ஹாலிவுட் விமர்சனம்


ஆங்கிலத்தில் தயாரான 'அன்டர் வேல்டு-4' ஹாலிவுட் படம் 'பாதாள உலகம்-4' என்ற பெயரில் தமிழில் வந்துள்ளது. ரத்தம் குடிக்கும் பெண் காட்டேரி செலின். யாரும் அழிக்க முடியாதவள். இவளுக்கும் லைக்கன் இன காட்டேறி இளைஞனுக்கும் காதல் மலர்ந்து அசாத்திய சக்தியோடு பெண் குழந்தை பிறக்கிறது.



அக்குழந்தை வளர்ந்ததும் லைக்கன்கள் கடத்துகின்றன. அவற்றிடம் இருந்து மகளை காப்பாற்ற செலின் போராடுகிறாள். செலின் மனித இனத்துக்கு எதிரானவள் என அவளை கொல்ல போலீசார் முடுக்கி விடப்படுகின்றனர். இருமுனை தாக்குதலையும் முறியடித்து மகளை செலின் மீட்டாளா? என்பது கிளைமாக்ஸ்...


செலின் கேரக்டரில் கேட் பெகின்சேல் வருகிறார். இவர் லைக்கன்களுடன் பறந்து தாவி மோதும் சண்டைகள் சீட் நுனிக்கு இருக்கும் ரகம். கிராபிக்ஸ் தொழில்நுட்பம் பிரமாண்டத்தை பதிவு செய்கிறது.


லைக்கன்களும் காட்டேறிகளும் பாதாள அறைக்குள் மோதும் ஆக்ஷனும் பரிசோதனை கூடத்தில் சிறுமியை செலின் மீட்கும் சீன்களும் விறுவிறுப்பான உச்சம்.


ஸ்டீபன், மைக்கேல் ஏலி, தியோ ஜேம்ஸ், சார்லஸ் டான்ஸ் போன்றோரும் நடித்துள்ளனர். மேர்லின், ஸ்டீன் இணைந்து இயக்கியுள்ளனர்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget