ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நாயகியாக வலம் வந்த அசின், கஜினி ரீ-மேக் மூலம் இந்திப்பட உலகிற்கு சென்றார். முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட் ஆனதால் மீண்டும் தமிழ் சினிமா பக்கம் தலைகாட்டாமல் இருந்தார். இந்தியில் அடுத்தடுத்த படங்கள் ப்ளாப் ஆனதால் தமிழில் விஜய்யுடன் காவலன் படத்தில் நடித்து ரீ-எண்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு தமிழ் படங்களில் கமிட் ஆகாத அசின், தற்போது இந்தியில் ஹவுஸ்புல்-2 மற்றும் போல்பச்சன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
பாலிவுட்டில் நம்பர் ஒன் இடத்தை பிடிப்பதற்கான ரேஸில் ஓடிக் கொண்டிருக்கும் அசின், அங்கு பத்திரிகையாளர்களை சந்திக்கும்போதேல்லாம் ஒரு கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறி வந்தார். உடல் எடையை குறைக்கும் எண்ணம் இருக்கிறதா? என்று நிருபர்கள் கேள்வி கேட்டு துளைத்தெடுத்து வந்தனர். இந்நிலையில் கடைசியாக நிருபர்களை சந்தித்த அசினிடம் அதே கேள்வி மீண்டும் கேட்கப்பட்டது. அதற்கு அசின், ஒரு மாதம் கழித்துப் பாருங்கள் தெரியும், என்று கூறியிருந்தார்.
சுமார் ஒரு மாதத்துக்கு மீடியாக்களின் வெளிச்சத்தில் படாமல் இருந்த அசின் சமீபத்தில் நடந்த ஜெனிலியா திருமணத்தில் பங்கேற்றார். யாரும் அவரைக் கண்டு கொள்ளாமல் இருந்தனர். ஆனால் அவர்தான் அசின் என்று கண்டு கொண்ட சில புகைப்படக் கலைஞர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டு படம் எடுத்தனர். அவரை அடையாளம் தெரியாததற்குக் காரணம் ஒல்லி பிச்சானாக மாறி இருந்ததுதான். கொழுப்பு நீக்கும் அறுவை சிகிச்சை செய்து கொண்டதால்தான் அவரால் ஒல்லியாக முடிந்தது என்று பாலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.