நடிப்பதற்காக உடம்பைக் குறைத்த வனிதா!


கடந்த ஆண்டு குடும்ப வாழ்க்கை சர்ச்சைகளை பொதுவில் வைத்து பெரும் பரபரப்பு கிளப்பிய வனிதா விஜயகுமார் இப்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறார்.
மாணிக்கம் படத்தில் ராஜ்கிரண் ஜோடியாக அறிமுகமானவர் வனிதா. பின்னர் அன்றைக்கு வளர்ந்து வரும் நடிகராக இருந்த விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகாவில் நடித்தார். ஆனால் பெரிதாக சோபிக்க முடியாமல் போனதால், டிவி நடிகர் ஆகாஷை திருமணம் செய்து கொண்டு ஒதுங்கினார். பின்னர் விவாகரத்து பெற்ற வனிதா, ராஜன் என்பவரை திருமணம் செய்தார்.
முதல் கணவருக்குப் பிறந்த குழந்தையை தருமாறு கோரி நீதிமன்றம் போனார் வனிதா. ஆனாலும் குழந்தயை தன்னிடம் கொடுக்க ஆகாஷும், தன் தந்தை விஜயகுமாரும் மறுப்பதாகக் கூறி போலீஸ் ஸ்டேஷன், நீதிமன்றம் என போய் பரபரப்பு கிளப்பினார் வனிதா.


ஆனாலும் குழந்தைப் பிரச்சினை தீரவில்லை. வனிதாவின் மூத்த மகன் விஜயஸ்ரீஹரி வர மறுத்துவிட்டான். எனவே இரண்டாம் கணவரைப் பிரிந்த வனிதா, தற்போது குழந்தைக்காக மீண்டும் முதல் கணவருடனேயே சேர்ந்துள்ளார். தற்போது உடல் எடை குறைத்து ஒல்லியாக மாறியுள்ளார். சினிமாவில் நடிக்க கதைகள் கேட்டு வருகிறார்.


மீண்டும் நடிப்பது குறித்து வனிதா கூறுகையில், "குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டதாலும் சொந்த பிரச்சினைகளாலும் 11 வருடங்களாக சினிமா பற்றி சிந்திக்கவில்லை. இப்போது மீண்டும் நல்ல வேடங்களில் நடிக்கலாம் என முடிவெடுத்து சினிமாவுக்கு வருகிறேன். கதைகள் கேட்டு வருகிறேன். விரைவில் புதுப் படம் குறித்து அறிவிப்பேன்.


ஆறு மாதங்களாக கடும் உடற்பயிற்சிகள் செய்து உடல் எடையை குறைத்தேன். எந்த அறுவைச் சிகிச்சையும் செய்யவில்லை," என்றார்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget