உலக கிரிக்கெட் வரலாற்றில் 100வது சதமடித்து புதிய உலக சாதனை புரிந்தார் சச்சின் டெண்டுல்கர்! வங்கதேசத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 4வது லீக் ஆட்டத்தில் வங்கதேச அணிக்கு எதிராக இந்த உலக சாதனையைப் படைத்தார் சச்சின்.
138 பந்துகளில் 10 பெளண்டரிகள், ஒரு சிக்ஸருடன் தனது 100வது சதத்தை எட்டினார் சச்சின். டெஸ்ட் போட்டிகளில் 51 சதங்களும், ஒரு நாள் போட்டிகளில் 49 சதங்களும் அடித்துள்ளார் சச்சின் என்பது குறிப்பிடத்தக்கது.
சச்சின் சதமடித்ததும் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பினர். அணி வீரர்களும் அனைவரும் மகிழ்ச்சியுடன் கைத்தட்டினர்.