பயர்பாக்சை எளிமையாக கையாளும் யுக்திகள்!


ஒரு பிரவுசர் புரோகிராமினைப் பயன்படுத்துபவரின் விருப்பங்களையும் தேர்வுகளையும் அறிந்து கொள்ள, பிரவுசர் கம்ப்யூட்டரில் உருவாக்கி வைத்திடும் பைல்களே குக்கீ பைல்கள். பாஸ்வேர்ட் அறிந்து கொள்ளுதல், விருப்பமான தளங்களைப் புரிந்து கொள்ளுதல் போன்ற பயனாளரின் விருப்பங்களை, இந்த குக்கீ பைல்கள் பதிந்து வைத்துக் கொண்டு, இணைய உலாவினை எளிதாகவும், சிக்கலின்றியும், விரைவாகவும் இயக்குகின்றன. பொதுவாக வே, பிரவுசர்கள் அனைத்துமே,
குக்கீ பைல்களை உருவாக்கிப் பதிப்பதனை மாறா நிலையில் தாங்களாகவே இயக்கி செயல்படுத்தும் வகையில் வைக்கின்றன. இருப்பினும், பயனாளர் எண்ணினால், அவற்றை இயங்காமலும், இயங்கும் நிலையிலும் வைக்கலாம். பயர்பாக்ஸ் பிரவுசரில் இவற்றை எப்படிக் கையாளலாம் எனப் பார்க்கலாம்.
டூல்ஸ் (Tools) மெனுவில், ஆப்ஷன்ஸ் (Options) பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு கிடைக்கும் விண்டோவில், Privacy என்ற டேப்பினை இயக்கவும். இதில் History என்ற பிரிவில் Use custom settings for history என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். குக்கீ பைல்களை முழுமையாக இயங்கா நிலையில் வைத்திட, Accept cookies from sites என்ற இடத்தில் இருக்கும் டிக் அடை யாளத்தை எடுத்துவிடவும். இதன் மூலம் தர்ட் பார்ட்டி குக்கீ பைல்களையும் எடுத்துவிட முடியும். அல்லது குக்கீ பைல்களை, அவை உருவாக்கப்பட்டு குறிப்பிட்ட நாள்கள் வரை இருக்கட்டும் என எண்ணினால், Keep until என்ற கீழ் விரி மெனுவில் எத்தனை நாட்கள் அவை இருந்து இயங்க வேண்டும் என்பதனை செட் செய்திடலாம். அல்லது, ஒவ்வொரு முறை குக்கீகள் உருவாக்கப் படுகையில், அவற்றை வைத்துக் கொள்ளவா ? வேண்டாமா? என்ற ஆப்ஷன் உங்களிடம் கேட்கப் பட வேண்டும் எனில், ask me every time என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். ஆனால், இதனைத் தேர்ந்தெடுத்தால், அடிக்கடி இந்த ஆப்ஷன் நம்மிடம் கேட்கப்படும். பின்னர், அதனைக் கண்டு எரிச்சல் படக் கூடாது. இவை குறித்த கூடுதலான கட்டுப்பாடு வைத்துக் கொள்ள, அல்லது குக்கீகள் குறித்த தகவல்களைத் தெரிந்து கொள்ள என்ற Show Cookies பட்டனில் கிளிக் செய்திடவும். இங்கு நீங்கள் குக்கீகள் அனைத்தையும், அல்லது சிலவற்றை நீக்கலாம், இயக்கலாம், முடக்கலாம் அல்லது கட்டுப்பாட்டில் வைக்கலாம். 
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget