தனது “Love Anthem" ஆல்பத்திற்காக அமெரிக்கா சென்றிருந்த சிம்பு சில நாட்களுக்கு முன் தான் சென்னை வந்தார். சென்னை வந்ததும், சிம்பு நடித்துக் கொண்டிருந்த போடா போடி, வடசென்னை, வேட்டை மன்னன் ஆகிய படங்களின் படப்பிடிப்பிற்கு தன்னை தயார் படுத்திக் கொண்டிருந்தார். வெளிநாட்டிலிருந்து வந்ததும் தனது படங்கள் ரிலீஸாவது பற்றி ஏதாவது கூறுவார் என்று காத்திருந்த சிம்புவின் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக தனது திருமணத்தை பற்றி தெரிவித்துள்ளார் சிம்பு. நயன்தாராவிற்கும் சிம்புவிற்கும் காதல்,
திருமணம் என்று பல செய்திகள் வந்தாலும் சில கருத்து வேறுபாடுகளால் இருவரும் பிரிந்தனர்.
நயன்தாரா வேறு ஒருவருடன் காதல் பிரிவு என்று போய்விட்டார். இப்போது அது எதற்கு அடுத்த வருடம் சிம்புவிற்கு திருமணமாம். மனைவியை தேர்ந்தெடுக்கும் பொருப்பை தனது அம்மாவிடம் கொடுத்துள்ளார் சிம்பு(பையன்னா இப்படி இருக்கனும்).
ஆனாலும் இந்த ஒரு வருடத்திற்குள் ஏதாவது ஒரு பெண்ணுடன்(!) காதல்(!) ஏற்பட்டால் அதையும் என் அம்மா கருத்தில் கொள்ள வேண்டும் என்பது சிம்புவின் கோரிக்கை. தனது திருமணம் பற்றி பேசும் போது சிம்பு
“ஒரு பெண்ணை காதலிப்பேன் என நம்புகிறேன். என் திருமணத்தை பொருத்த வரையில் நான் விரும்புகிறவள் எனக்கு ஒரு தோழியாகவும், நம்பிக்கையானவராகவும் இருக்க வேண்டும். நான் நானாக இருப்பதையே விரும்ப வேண்டும். நகைச்சுவை உணர்வு இருக்கும் பெண்ணாகஇருக்க வேண்டும் என்ற சிறிய ஆசைகள் தான் எனக்கு உள்ளது” என்று கூறியுள்ளார். சிம்பு இன்னும் சில மாதங்களில் “காதல் வந்திருச்சு” பாடல் பாடுவார் போல...