தொழில் நுட்ப உலகில் ரெக்கைகட்டி பறந்து கொண்டு இருக்கும் கூகுள் புதிய 7 இஞ்ச் நெக்சஸ் டேப்லட்டை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கூகுளின் இந்த டேப்லட் வெளியானால் மற்ற டேப்லட் மார்கெட்டில் பெரிய போட்டி நிலவும் என்று நிச்சயமாக கூறலாம்.
இந்த நெக்சஸ் டேப்லட் குறைந்த விலை கொண்டதாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது. அதுவும் கின்டில் ஃபையர் டேப்லட்டையும் விட, கூகுள் வெளியிட இருக்கும் புதிய டேப்லட் குறைந்த விலை கொண்டதாக இருக்கும். பெரிய பெரிய தொழில் நுட்பங்களை அசாத்தியமாக அள்ளி கொடுக்கும் கூகுள், இந்த டேப்லட் பற்றிய தொழில் நுட்ப விவரங்களை வெளியிடாமல் ரகசியம் காக்கிறது.
கூகுளின் இந்த புதிய டேப்லட் ரூ.7,478 விலையில் இருந்து ரூ.9,988 விலை வரையில் கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் இதுவரை கூகுள் நிறுவனத்திடம் இருந்து எந்த அதிகார பூர்வமான தகல்களும் வெளியாகவில்லை