சமீபத்தில் எச்பி தனது புதிய நெட்புக்கை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த புதிய நெட்புக்கிறக்கு எச்பி மினி 210 என்ற பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த புதிய நெட்புக் பல ஏராளமான தொழில் நுட்பங்களைக் கொண்டு வருகிறது. விண்டோஸ் 7 இயங்கு தளத்தில் இயங்கும் இந்த நெட்புக் இன்டல் ஆட்டம் என்2800 1.86 ஜிஹெர்ட்ஸ் ப்ராசஸரையும் 320 ஜிப சாட்டா எச்டிடியையும் கொண்டிருக்கிறது. 1024 x 600 பிக்சல் ரிசலூசன் கொண்ட டபுள்யுஎஸ்விஜிஎ எல்இடி பேக்லிட் டிஸ்ப்ளேயை இந்த நெட்புக் வழங்குகிறது.
மேலும் இன்டல் என்எம் 10 + ஐசிஎச்8எம் சிப்சட் மற்றும் 2ஜிபி 1333 மெகா ஹெர்ட்ஸ் டிடிஆர்3 ரேமையும் இந்த நெட்புக் தாங்கி வருகிறது.
இந்த நெட்புக் மல்டிமீடியா வசதி கொண்டது. அதற்காக இந்த நெட்புக் மல்டி பார்மட் டிஜிட்டல் மீடியா கார்டு ரீடர், இன்டக்ரேட்டட் டிஜிட்டல் மைக்ரோபோன், எர்த்நெட், ப்ளூடூத், இன்டல் க்ராபிக்ஸ் மீடியோ அக்சிலரேட்டர், வெப்காம் மற்றும் வைபை போன்ற ஏராளமான வசதிகளையும் இந்த நெட்புக் வழங்குகிறது.
இதன் எடை 1.34 கிலோ மட்டுமே. அதனால் இதை மிக எளிதாக எடுத்துச் செல்ல முடியும். மேலும் இது பல நிறங்களில் வருகிறது. மேலும் இந்த நெட்புக் ஹெட்போன் மற்றும் மைக்ரோபோன் போன்றவற்றையும் சப்போர்ட் செய்கிறது.
மின்திறனிற்காக இந்த நெட்புக் 6 செல் லை பேட்டரியைக் கொண்டிருக்கிறது. இந்த பேட்டரி 8.75 மணி நேர இயங்கு நேரத்தை வழங்குகிறது. மேலும் இன்டர்நெட்டை இந்த நெட்புக்கில் மிக வேகமாக ப்ரவுஸ் செய்ய முடியும். கேமிங் வசதிகளும் இந்த எச்பி நெட்புக்கில் அமர்க்களமாக இருக்கின்றன. மேலும் இந்த நெட்புக் எச்பி லைப் டைம் சப்போர்ட் அசிஸ்டண்ட் வசதியுடன் வருகிறது.
இந்த புதிய நெட்புக்கின் விலை ரூ.19000 மட்டுமே. அதனால் இந்த நெட்புக் விற்பனையில் சாதனை படைக்கும் என நம்பலாம்.