புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து இருக்கிறது ஹுவெய். இந்நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் ஹுவெய் அசன்டு-300 கூகுள் ஆன்ட்ராய்டு வெர்ஷன் 2.3 ஜின்ஜர்பிரெட் இயங்குதளத்தில் இயங்கும்.
இந்த ஸ்மார்ட்போனுக்கு ஒரு பெரிய பிரம்மாண்டத்தை கொடுப்பதே அதன் திரை தான். ஏனெனில் இதில் 4.0 இஞ்ச் திரை வசதி உள்ளதால்
இதில் எந்த தகவல்களையும் எளிதாக பார்க்கலாம். அதோடு 480 x 800 திரை துல்லியத்தினையும் கொடுக்கும். இதன் டிஎப்டி தொடுதிரையின் மூலம் தகவல்களை மிக எளிதாக பெறலாம். இதில் 5 மெகா பிக்ஸல் கேமரா இருப்பதால் இனிமையான தருணங்களை புகைப்படப்பமாக மாற்ற முடியும்.
பிரவுசிங் வசதியை பெற, இதில் ஜிபிஆர்எஸ் மற்றும் எட்ஜ் தொழில் நுட்பத்தினையும் இந்த ஸ்மார்ட்போன் வழங்கும். டியூவல் டோன் நிறத்தில் எளிமையாக வடிவமைக்கட்டுள்ளது அசன்டு-300 ஸ்மார்ட்போன்.
நிறைய ஆன்லைன் சைட் மற்றும் வீடியோ ஸ்ட்ரீமிங் அப்ளிக்கேஷன்களும் இதில் பயன்படுத்த முடியும். இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போனின் விலை கூடிய விரைவில் வெளியாகும்.