புகுசிமா கதிர்வீச்சின் தாக்கம் என்று குறையுமே?


ஜப்பானில் புகுசிமா அணுஉலை விபத்து நடந்து ஓராண்டு கடந்து விட்ட நிலையில் தற்போதும் கதிர்வீச்சின் தாக்கம் அதிக அளவில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.  புகுசிமா அணுமின் நிலையத்தில் இரண்டாவது அணு உலையில் நவீன கருவி மூலம் ஆய்வு நடந்தது. அதில், தற்போதும் கதிர்வீச்சின் தாக்கம் அதிக அளவில்
இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 


மேலும், அணு உலை மிகவும் சிதலமடைந்து இருப்பதாகவும், உயிரை கொல்லும் அளவை விட பத்து மடங்கு அதிகமாக கதிர்வீச்சு இருப்பதாகவும், அதிகாரிகள் கவலை தெரிவித்தனர். 


கதிர்வீச்சு நிறைந்த இந்த அணு உலையை செயலிழக்க செய்ய 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகலாம் எனவும், நிலைமையை சீர் செய்ய ஏதாவது புதிய தொழில் நுட்பத்தை உருவாக்க வேண்டும் என ஜப்பான் அதிகாரிகள் தெரிவித்தனர்.


இதேபோன்று, அணு உலையை குளிர்விக்க போதிய அளவு தண்ணீர் இல்லை என்பதும், ஆய்வில் தற்போது தெரிய வந்துள்ளது.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget