கருத்து பரிமாறல்களில் ஒரு பெரிய சுதந்திரத்தை ஏற்படுத்திய ட்விட்டர் இன்று 6-வது பிறந்த நாளை கொண்டாடுகிறது. ட்விட்டர் மார்ச் 21-ஆம் தேதி 2006 ஆண்டு வெளியிடப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு நண்பர்களுக்கிடையே அதிகமான கருத்து பரிமாறல்கள் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் இந்த உண்மையை பொய்பித்துவிட்டது ட்விட்டர்.
சோஷியல் மீடியாவான ட்விட்டர் மூலம் உடனுக்குடன் அதிக தகவல்களையும், மனதில் தோன்றியவற்றை உடனே தெரிவிப்பது போன்ற விஷயங்களை நொடிப்பொழுதில் நிறைவேற்றி வருகிறது ட்விட்டர். இத்தகைய வசதியை ட்விட்டர் மூலம் ஏற்படுத்தியவர் ஜேக் டார்சி என்பவர்.
சாஃப்ட்வேர் வல்லுனரான இவர் உருவாக்கிய ட்விட்டரில் இன்று 28 மொழிகளை பயன்படுத்த முடியும். முதலில் 5 பேர் கொண்ட டீம் மூலம் உருவாக்கப்பட்ட இந்த ட்விட்டர் இன்று இமாலய வெற்றியை பெற்றிருப்பதும் உண்மை தான். சாதாரண மனிதர்களில் இருந்த பெரிய பெரிய பிரபலங்கள் வரை ட்விட்டர் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
நண்பர்களை இணைக்கும் நண்பனாக இருக்கும் ட்விட்டர் இன்று கோலாகலமாக பிறந்த நாளை கொண்டாடுகிறது.