ஆனால் இந்த இரண்டுக்கும் இடையே எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று அமெரிக்க வெளியுறவுத்துறை விளக்கியுள்ளது.
ஈழப் போரின் கடைசிக் கட்டத்தில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை முக்கியமாக வலியுறுத்தி ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது. இந்த தீர்மானம் நேற்றுதான் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில் இலங்கைக்கான ஆயுத விற்பனை கட்டுப்பாடுகளை அமெரிக்க அரசு தடாலடியாக தளர்த்தியுள்ளது. இருப்பினும் இது கொள்வனவு செய்யும் ஆயுதங்களுக்கேற்றப்படி மாறும் என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை கூறியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
வியாழக்கிழமை முதல் இந்த கட்டுப்பாடு தளர்வு அமலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய உத்தரவுப்படி, இலகுரக விமானங்கள், கண்காணிப்பு கேமராக்கள், அதுதொடர்பான பொருட்களை அமெரிக்காவிலிருந்து இலங்கை வாங்கிக் கொள்ள முடியுமாம்.
குறிப்பாக வான் மற்றும் கடல் மார்க்கமான கண்காணிப்புக்குத் தேவையான உபகரணங்களை இனி அமெரிக்காவிடமிருந்து இலங்கை பெற முடியும்.
கடந்த 80களில் விடுதலைப் புலிகளுக்கும், இலங்கைப் படையினருக்கும் இடையே போர் வெடித்ததைத் தொடர்ந்து ஆயுத விற்பனைக்கு கட்டுப்பாடுகளை அமெரிக்கா விதித்தது. தற்போதுதான் அதில் முதல் முறையாக தளர்த்தலை அது மேற்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.