கேன்ஸ் பட விழாவிற்க்கு குழந்தையுடன் செல்லும் ஐஸ்வர்யா ராய்!


கேன்ஸ் பட விழா பிரான்சில் வருகிற 16-ந்தேதி தொடங்குகிறது. இந்த பட விழாவில் 4 இந்திய  திரைப்படங்கள் திரையிடப்பட  உள்ளன. அவற்றில் மூன்று படங்கள் அனுராக் காஷ்யாப் தயாரித்த படங்கள் ஆகும். கேன்ஸ் பட விழாவில் நடிகர் அர்ஜுன் ராம்பால், மனைவி மெஹர், ஐஸ்வர்யா ராய் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர். நடிகை ஐஸ்வர்யாராய் தனது 5 மாத குழந்தையான ஆராத்யாவுடன் கலந்து கொள்கிறார். 38 வயதாகும் ஐஸ்வர்யா ராய், கேன்ஸ் படவிழாவில்  கலந்து கொள்வது இது 11-வது தடவையாகும். 

சில ஆண்டுகள் கேன்ஸ் பட விழா குழுவின் விளம்பர தூதராக ஐஸ்வர்யா ராய் பணியாற்றி இருக்கிறார். கடந்த ஆண்டு நடந்த கேன்ஸ் பட விழாவின் போது 'ஹீரோயின்' என்ற படத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராய்  ஒப்பந்தமானார்.


பின்னர் அந்த சினிமா படத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டார். ஐஸ்வர்யா ராய் கர்ப்பிணியாக இருப்பதால் அவர் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக அந்த படத்தில் கரீனா கபூர் நடித்தார். கேன்ஸ் பட விழாவில் நடிகை சோனம் கபூரும் கலந்து கொள்ள உள்ளார். 

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget