தெலுங்கில் கப்பார் சிங் மூலம் ஸ்ருதி ஹாசன் முதன் முதலாக ஹிட் கொடுத்துள்ளார். நடிகை ஸ்ருதி ஹாசன் தெலுங்கில் சித்தார்த்துடன் சேர்ந்து அனகனகா ஒக்க தீருடு மற்றும் ஓ மை பிரண்ட் ஆகிய இரண்டு படங்களில் நடித்தார். ஆனால் இரண்டுமே ஓடவில்லை. இதையடுத்து ஆந்திராவில் ஸ்ருதியின் மார்க்கெட் இறங்கியது. இந்நிலையில் பவன் கல்யாணுடன் சேர்ந்து அவர் நடித்துள்ள
கப்பார் சிங் கடந்த 11ம் தேதி ரிலீஸ் ஆனது.
வழக்கமாக ஸ்ருதி படம் ஊத்திக்கும் என்று நினைத்தவர்களுக்கு இது கொஞ்சம் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. காரணம் படம் ரிலீசான முதல் நாளில் ஆந்திராவில் மட்டும் ரூ. 8 கோடி 25 லட்சம் வசூலாகி புதிய சாதனை படைத்துள்ளது. படம் சூப்பர், டூப்பர் ஹிட்டாகிவிட்டது.
இதனால் ஸ்ருதி ராசியில்லாத நடிகை என்று கூறியவர்கள் இனியும் அதைத் தொடர முடியாது. இந்த படத்தின் வெற்றி மூலம் ஸ்ருதி தான் ராசியானவள் என்பதை நிரூபித்துவிட்டார்.
இந்த கப்பார் சிங் வேறு யாருமில்லை இந்தியில் சல்மான், சோனாக்ஷி சின்ஹா நடித்த தபாங் படத்தின் ரீமேக் தான். எது எப்படியோ, தபாங் எப்படி சோனாக்ஷிக்கு பெரிய பெயர் வாங்கிக் கொடுத்ததோ அதேபோன்று ஸ்ருதிக்கும் டோலிவுட்டில் பெயர் வாங்கிக் கொடுத்துள்ளது.