வித்யாபாலனின் கஹானி படத்தில் நடிக்க நயன்தாரா – அனுஷ்கா இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. டர்ட்டி பிக்சர்ஸ் படத்திற்கு பிறகு நடிகை வித்யாபாலனுக்கு மற்றுமொரு வெற்றியை கொடுத்த படம் கஹானி. இந்தபடத்தில் தொலைந்து போன தனது கணவரை தேடும் பெண்ணாக, அதுவும் நிறைமாத கர்ப்பிணியாக நடித்து
இருந்தார் வித்யாபாலன். இந்தியில் சூப்பர்-டூப்பர் ஹிட்டான இப்படம் இப்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் ரீ-மேக் ஆக இருக்கிறது. அஞ்சாதே, மாப்பிள்ளை படங்களை தயாரித்த நேமிசந்த் ஜபக் புரொடக்ஷன்ஸ் இப்படத்தை தமிழில் ரீ-மேக் செயகின்றனர்.
இந்நிலையில் வித்யாபாலன் வேடத்தில் நடிக்க நடிகை தேர்வு நடந்து வருகையில், அதற்கு அனுஷ்கா மற்றும் நயன்தாரா விருப்பம் தெரிவித்து இருப்பதாகவும், இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இப்படத்தை லிங்குசாமி, சக்ரி டோல்டி ஆகியோரில் ஒருவர் இயக்குவார் எனத் தெரிகிறது.